தடுப்பூசி தருணத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் !

Fakrudeen Ali Ahamed
சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர் கொள்ளும் சங்கடம் இயல்பானதே.

தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலை காட்டலாம்.

காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரை களைப் பயன் படுத்தினால் போதும்.

தடுப்பூசி போடவேண்டிய கால கட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல்

அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப் போடவும் வேண்டாம்.

குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.

குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும் போது போலியோ சொட்டு மருந்து போட வேண்டாம்.

அதே போல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்!

டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரி படுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில்

டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.

எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும் போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.

குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப் படுத்துவது நல்லது.

ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தை களுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.


1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: