குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன்போட வேண்டும்? எதற்கு? எப்போது?

Fakrudeen Ali Ahamed
குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள் ளும் காலத்தில் இருந்தே கவன த்தில் எடுத்துக் கொள்ள வேண்டி யது  கட்டாயம்!
குழந்தைக ளின் உடல் ஆரோக்கியம் தான் அவர்களின் மன ஆரோக்கி யத்துக்கு அடிப்படை.

குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுகின்றன.
அவற்றில் இருந்து குழந்தைக ளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தை களைக் காக்க இந்திய அரசாங் கத்தின் சுகாதாரத் துறையும்,

இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமை ப்பும் பரிந்துரை க்கும் தடுப்பூசிகள் என்னென்ன?

அவற்றை எந்தெந்தக் கால கட்டங்களில் மருத்து வர்களின் ஆலோசனை களோடு பயன் படுத்த வேண்டும்?

நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்க ளுக்கு

வழி காட்டுகி றார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.

தடுப்பூசி

நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு.
நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும் போது

அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கை யாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் தான்.

சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக் கொண்டு,

மீண்டும் அது போன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்கு தலில் இருந்து என்று விழிப் புடன் நம்மைப் பாதுகாக் கிறது.

சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்து களும் உடலுக்குள் செலுத்தப் படுகின்றன.

அவைதான் தடுப்பூ சிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

முதன் முதலில் பெரியம் மைக்குத் தான் தடுப்பூசி அறிமுக ப்படுத்தப் பட்டது.

அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்து கொண்டே இருக் கின்றன.

தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்

தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கி யமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர,

நோய்த் தொற்று க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் கால தலை முறையைப் பாதுகா க்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்ப டுத்துகிறது.
ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப் பட்டன!

குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள் தான் தற்காக்கின்றன.

என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…

குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோ வுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப் படுகின்றன.

குழந்தை பிறந்ததும் மருத்துவ மனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலை யில்லை.

இயற்கை நோய்த் தடுப்பு

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந் திருக்காது.

குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.

பிரசவத்துக்குப் பிறகு முதன் முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும்.

ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது.

எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!

குழந்தையின் எடை…
குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். 

பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.
Tags: