குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்?

Anonymous
குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை கள், சரியாக சினைமுட்டை சினைக்காத தன்மை மற்றும் மாத விலக்கு ஒழுங்கின்மை ஆகிய இரண்டும் தான்.

பெண்களுக்கு ஏற்படும் குழந்தையில்லா குறை பிரச்னைகள்?
பத்து பெண்களில் ஐந்து பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கிறது. பெண்களுக்கு சுரக்க வேண்டிய புரஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்கள் சரியாக சுரக்காததால் இந்தக் குறை ஏற்படுகிறது.
அடுத்த முக்கிய குறை, கர்ப்பப்பையிலும் அதன் சுவரை ஒட்டியும் ஏற்படும் கட்டிகளும் சினைப் பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளும். பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற ஊளைச் சதைகளும் கூட குழந்தை பிறக்காததுக்கு ஒரு காரணமாகிறது.
 
ஒரு சிறு எச்சரிக்கை: கருக்குழாய் (பெலோபியன் டியூப்) அடைப்பு என்பது முன்பெல்லாம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது நம் தவறான வாழ்க்கை முறை கூட இதற்கு காரணமாகிறது.

உதாரணமாக உடலுக்கு அதிக வேலை தராமல் இருக்கும் போது நம் உடலில் ஏற்படும் ஊளைச்சதைகள் கர்ப்பப் பையைச் சுற்றிலும் வளர்ந்து பின் கருக்குழாய் உள்ளேயும் போய் அடைகிறது.

இதற்கு முன்பு கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களுக்கோ அல்லது குழந்தையில்லா குறைக்காக அடிக்கடி டி அண்ட் ஸி (Dilation and curettage ) செய்து கொள்பவர்களுக்கோ அந்த புண்கள் ஆறக் கொடுக்கப்படும்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்?
ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகளால் கருக் குழாய்களின் ஒரு முனையோ அல்லது இரு முனைகளோ மூடி விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

முதல் குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருச்சிதைவு செய்து கொள்ளும் சில தம்பதியர் மத்தியில் இந்தக் குறை அதிகம் ஏற்படுவதைக் காண்கிறேன்.

குழந்தை உருவாகாமல் இருக்க அவர்கள் கருத்தடுப்பு முறைகளை உபயோகித்தால் பிற்காலத்தில் குழந்தை இல்லாக் குறையால் தவிக்க வேண்டியதில்லை...
சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை தடவுங்கள் !
பெண்கள் காலதாமதமாக குழந்தை பெற நினைப்பதும் (35 வயதுக்கு மேல்) குழந்தையில்லா குறைக்கு ஒரு முக்கிய காரணம்! சிலநேரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்தக் குறையும் இருக்காது.

அப்படியிருந்தும் குழந்தை பிறக்காமல் போவதுண்டு! இதற்கு சரியான சமயத்தில் அல்லது சரியான முறையில் உறவு கொள்ளாதது அல்லது டென்ஷன் என்று ஏதாவது காரணங்கள் இருக்கலாம்!

இரண்டு சிறப்புகள்! 

குழந்தைப் பிறப்புக்கான ஆண்கள் குறைகளில் மிக முக்கியமானது 'Nil Count' எனப்படும் ‘அஜுஸ்பெர்மியா, என்ற என்ற நிலை.

இந்த நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தில் செயற்கை கருவூட்டலுக்குத் தான் (அதிலும் குறிப்பாக பிற ஆண்களின் உயிரணுவைக் கொண்டு) முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் இந்தக் குறையை தனது இந்திய மருத்துவத்தின் மூலம் பலருக்கு போக்கி வெற்றிகரமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தந்திருக்கிறார் ஜமுனா.
குழந்தையில்லா குறை
அதே போல பெண்ணின் மிக முக்கியமான குறை பெலோபியன் குழாய்கள் அடைத்திருப்பது. பெலோபியன் குழாய்களின் வழியாகத்தான் உயிரணு, சினைமுட்டையைச் சேர்ந்து கருமுட்டையாக உருவாகிறது.

கருவுருதலுக்கு இதுதான் மிக முக்கியம். ஆனால் சமயத்தில் சில பெண்களுக்கு இந்த இரண்டு பெலோபியன் குழாய்களுமே அடைத்துக் கொண்டிருக்கும்.

இவர்களும் செயற்கை கருவூட்டல் முறைக்கோ (டெஸ்ட் டியூப்பேபி) அல்லது பெலோபியன் குழாயில் செய்யப்படும் மைக்கோ சர்ஜரிக்கோதான் போக வே ண்டும்.

இந்த இரண்டு முறைகளிலுமே வெற்றியின் சதவிகிதம் பத்து சதவிகித த்துக்கு உள்ளே தான். (வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் கணக்குப்படி).
அதிலும் குறைந்தது நாலைந்து முறை முயற்சித்தால் மட்டுமே. ஆனால் இந்தக்குறையுள்ள பெண்களுக்கு பக்க விளைவுகளற்ற சித்த மருத்துவம் மூலமே பெலோபியன் குழாய் அடைப்புகள் நீக்கி இயற்கையான முறையிலேயே கருத் தரிக்க வைக்கிறார் டாக்டர் ஜமுனா.

பல மருந்துகள் மனித வாழ்க்கையோடு, தாம்பத்யத்தோடு, கருவுறுதலோடு, இன்னபிற பிரச்னை களோடு அல்லவா விளையாடி விடுகின்றன.

காரணம், ஆண் மலட்டுத்தன்மைக்கு இத்தகைய சில மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகி விடுகின்றன’’ என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் டாக்டர் ஜமுனா.

கீழே சொல்லப்பட்ட சில மருந்துகள் உயிரணு இயங்கும் தன்மையையே பாதிக்கின்றன என்கிறார்.

காளானுக்கு எதிரான ketoconazole மருந்து குடல் அழற்சிக்கான Sulfasalazine மருந்து Calcium Channel Blockers உயர்ரத்த அழுத்த மருந்து Spironolactone இதுவும் உயர் ரத்த அழுத்த மருந்து கீல்வாத மருந்தான Alloporinol  
 
மற்றொரு கீல்வாத மருந்தான Colchicine புற்றுநோய், சொரியாசிஸ், ஆர்த்ரிடீஸ்க்கான Methotrexate மருந்து. குடல் புண் மருந்தான Cimetidine.
கவனிக்கவும்... இந்த மருந்துகள் ஆண்கள் உடலுறவு கொள்ளும் விஷயத்திலும் கூட குறைகளுக்கு வழி வகுத்து விடக்கூடும்.
குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்?
Chlorpromazine, Haloperidol, Thioridazine, Amitriptyline, Imipramine, Fluoxetine (Prozac), Paroxetine (Paxil), Sertraline (Zoloft), Guanethidine, Prazosin, Phenozibenzamine, Phentolamine, Reserpine, Thazidess 

இவை தவிர ஆண்டிபயாடிக் மருந்துகளான Nitrofuran, Erythromycin, Gentamicin போன்றவற்றால்கூட ஆண் உயிரணு உற்பத்தியோ, உயிரணு நீந்தும் தன்மையோ பாதிக்கப்படலாம். 
 
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். மேலே கண்ட மருந்துகள், அதை உட்கொள்கிற எல்லோருக்குமே பிரச்னை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது.
இவை ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைகின்றன என்பதைத்தான் என் அனுபவத்தில் நான் கண்டறிந்திருக்கிறேன்’’ என்கிறார் அவர்.
கொஞ்சம் ஆங்கிலம்...
Tags: