கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்து மாதங்கள் கருவை சுமந்து
 அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை.  
அதற்கு தாயானவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். 
எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளனர் படியுங்களேன்.
துத்தநாகம்.. 
கர்ப்பகாலத்தில்
 கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச் சத்து சரியான அளவில் இருக்க 
வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு 
சக்திக்கும்  ஏற்றது.
எனவே தான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லி கிராம் 
புரதச்சத்து அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்து 
கின்றனர்.  
ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலை 
முறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்து கின்றனர்.
ஃபோலிக் அமிலம்... 
போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
எப்போதுமே கவர்ச்சியை விரும்பும் தொகுப்பாளினி அஞ்சனா !
எனவே தான் தினசரி 400 முதல் 800 மைக்ரோ கிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக்
 கொள்ள வேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப் படுகின்றனர். இது பச்சை காய்கறிகளிலும், இலைக்காய் கறிகளிலும் காணப்படு கிறது.
மெக்னீசியம்.. 
கர்ப்ப காலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. 
எனவே தினசரி 200 மில்லி கிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் 
எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர்.
தானியங்கள்,
 பருப்புகள், இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் 
கர்ப்ப காலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் 
அறிவுறுத்து கின்றனர்.
பி வைட்டமின்கள்... 
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. 
தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின் களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத் திற்கு ஏற்றது.
முட்டை உண்பதால் சர்க்கரை நோய் உண்டாகுமா?
அதே
 போல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது. மீன் 
எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. 
டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
அதே போல் கர்ப்ப காலத்தில் தினசரி 1500 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து 
உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து 
கின்றனர். 
அதே
 போல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் 
மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ள லாம்.
இரும்பு சத்து...  
கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்பு சத்து எடுத்துக்
 கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். 
  
 
 
 
வயிற்று
 போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர்
 அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
 
 
கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கி விடுகிறது.
இதனால்
 நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் 
மருத்துவர்கள். கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது 
இயல்பு.
கோலா குளிர்பானங்களை குடிப்பதால் என்னாகும்?
எனவே
 தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் 
என்கின்றனர் மருத்துவர்கள். 
அதே போல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு 
தண்ணீர் பருக வேண்டும். இல்லை
 யெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகி விடும். 
எனவே கர்ப்ப காலத்தில் 
உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டியது அவசியம்
 என்கின்றனர் நிபுணர்கள்.
அதே போல் கர்ப்ப காலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ 
சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 
அதே போல் கர்ப்ப 
காலத்தில் புகைப்பதையோ, மது அருந்து வதையோ தவிர்க்க வேண்டும் என்கின்றனர் 
மருத்துவர்கள். 
அதே
 போல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள் வதையோ, 102 டிகிரிக்கு
 மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதும் 
மருத்துவர்களின் அறிவுரையாகும்.
இளநீரில் நார் சத்து
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது 
தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் 
பரிந்துரைந்துள்ளனர்.
இளநீரில்
 எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக 
இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் 
மருத்துவர்கள்.
கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் !
இதனால்
 கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் 
அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை,
 உப்பு மற்றும் புரத சத்து உள்ளது.
மேலும்
 இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் 
உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும், இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய 
உதவுகிறது.
இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ், கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் 
வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில்
 அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க 
காரணமாக உள்ளது. லாரிக் அசிட், ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை 
இதில் அதிகமாக உள்ளதால் 
இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து
 போராட உதவுகிறது. 
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகு பொருள் 
(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் 
இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை
 முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. 
இயற்கை
 சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை 
என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் 
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு 
உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. 
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி 
குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும்
 காபின் உள்ளது.  
மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?
எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது 
இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு 
மற்றும் நோய் தாக்குதல் 
பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும்
 பரிந்துரைக்கபடுகிறது.    
எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத 
குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.








