பி.சி.ஷி. (BCG) தடுப்பூசி - குழந்தை பிறந்தவுடன் !

Fakrudeen Ali Ahamed
1 minute read
(கட்டாயம்) - பி.சி.ஜி. (BCG – Bacille Calmette-Guerin) – குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி.
குழந்தையின் இடது கையில் தோள் பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்து விடும் என்று சொல்ல முடியாது.

குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.

எச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம்.

அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை.

சில நாட்கள் வரை இருந்து விட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும்.

புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல  மருத்துவரைக் கலந்தா லோசிப்பது நல்லது. 

புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக் கூடாது.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags:
Today | 10, April 2025