கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு மீன் உணவுகள் !

Fakrudeen Ali Ahamed
2 minute read
0
குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சி
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. 
 
அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். 
 
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும் போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

கர்ப்பிணிகளாக இருக்கும் போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. 
மூளை வளர்ச்சிக்கு மீன் உணவுகள்
அதில், கர்ப்பத்தின் போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். 
 
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. 
 
இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. 
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு மீன் உணவுகள்
இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும். வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். 
 
நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். 
 
அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் 
 
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 11, April 2025