இரவில்
எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன நல
ஆராய்ச்சி யாளர்கள்.
மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற் கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் வேலை திறன் பாதிக்கப் படும்.
உடல் பருமன் போன்ற பல காரணங் களால் தேவையான தூக்கம் இல்லாமல் போய் விடும்.
தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளை க்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரண மாகவே காலையில் தூங்கி எழுந்ததும் உற்சாகம் பிறக்கிறது.
தூக்கம் வராமல் சிலர் இரவில் கஷ்டப் படுவார்கள். வீட்டுப் பிரச்சினை களையோ,
ஆபீஸ் பிரச்சினை களையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கவலை இருந்தால் தூக்கம் கிட்டே வராது.
உறக்க மின்றி தவிப்பவர் களுக்கான உணவுப் பட்டியல்.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந் துள்ளது.
இந்த இரண்டு க்குமே தூக்கத்தை வரவழைப் பதில் முக்கிய பங்கு உள்ளது.
ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வர வழைக்கும்.
இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக் குறையாக இருந்தால்,
அதனால் தூக்க மின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவை யும் ஏற்படலாம்.
பசலைக்கீரை:
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்க மின்மையை ஏற்படுத்தக் கூடிய ஒருவித படபடப்பு மற்றும்
மன அமைதி யின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த இக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறு கிறார்கள் நிபுணர்கள்.
இறால்:
இறால் மீனுக்கு தூக்கத்தை வரவழைக்கும் திறன் இருக்கிறது என்கிறார்கள் உணவு சத்து நிபுணர்கள்.
இதிலுள்ள ஆரோக்கிய மான கொழுப்பு, தூக்கத்தை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளது.
பீன்ஸ்:
பீன்ஸ், அவரைக்காய், பச்சைப் பட்டாணி போன்ற வற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்ட மின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன.
இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்கு படுத்துவதோடு,
மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.
மேலும் தூக்க மின்மையால் அவதிப்படு பவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன.