மதியம் குட்டி தூக்கம் தூங்குவது நல்லதா?

Fakrudeen Ali Ahamed
0
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். முடிந்தளவு காலை, மாலையில் வெளி வேலைகளை வைத்து கொள்ள வேண்டும். 
மதியம் குட்டி தூக்கம் தூங்குவது நல்லதா?
தவிர்க்க இயலாத காரணத்திற் காக வெளியில் செல்ல நேரிட்டால் குடையை உபயோகித்தல் நலன் பயக்கும்.

* கோடையில் கோபம் வருமா? இரவில் குறைந்த பட்சம் ஆறு மணி நேரம் துாங்க வேண்டும். கோடையில் வெயில் அதிகளவு இருப்பதால் மனஅழுத்தம் அதிகமாகும்.

எனவே முடிந்தளவு கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் அதனால் வரும் ஆபத்துக்கள் அதிகம். 
* மதியம் குட்டி துாக்கம் போடலாமா? மதிய உணவு உண்ட பின் 20 முதல் 30 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுப்பது மிகவும் நல்லது. அதேநேரம் உறங்கி விடக்கூடாது. 

* தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்? கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறும்.

எனவே நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. மோர், இளநீர் பருகலாம். தர்ப்பூசணிப்பழம் எடுத்து கொள்ளலாம். 

* வெப்பம் தணிய வீட்டின் மாடியில் தண்ணீர் தெளிக்கலாமா? தாராளமாக வீட்டின் மாடியில் தண்ணீர் தெளிக்கலாம். வீட்டின் வாசலிலும் தண்ணீர் தெளிப்பது நல்லது.

* கோடைக்கு ஏற்ற உணவை தேர்வு செய்வது எப்படி? வெள்ளரிப்பிஞ்சு, பனை நுங்கு, எலுமிச்சை பழம் ஜூஸ், தர்ப்பூசணிப் பழம் எடுத்து கொள்வது நல்லது. காரமான, உப்பு அதிகம் உள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க வேண்டும். 
டைட்டா ப்ரா போடாதீங்க தலைவலி அதிகமாயிரும் !
* கோடைக்கு ஏற்ற ஆடை எது? கோடையில் பருத்தி ஆடைகளை மட்டுமே உடுத்தி கொள்ள வேண்டும். மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவது நலம் பயக்கும். 

* கோடையில் கிளம்பும் வெப்ப கட்டிகளால் ஆபத்தா? அதிகம் வியர்ப்பவர் களுக்கு அக்கிகள் வெளிப்படும். அக்குல்களில் பூஞ்சான் பரவலாம்.

எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும் பவுடர்களை உபயோகிக்கலாம். கால்களிலும் அதை பயன் படுத்தலாம். – டாக்டர் ஜெபசிங்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)