டைட்டா ப்ரா போடாதீங்க தலைவலி அதிகமாயிரும் !

Fakrudeen Ali Ahamed
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் ப்ராவை போடுவ தில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக் கிறது.

சரியான ப்ரா

இதனால் அவர்கள் மன உளைச்சலு க்கு ஆளாவதோடு உடல் உபாதை களுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில்

போடப்படும் உள்ளாடை யினால் தலைவலி, மார்பகவலி, முதுகு வலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்

நிபுணர்கள். மூச்சு விடுவதில் சிரமம் அதிக அளவில் டைட்டாக போடப்படும் ப்ராவினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். மார்பு எலும்புக் கூடு வலிக்க ஆரம்பித்து விடும்.

மேலும் அதிக அளவில் டைட்டாக போடுவதால் உணவு ஜீரணிப் பதில் சிரமம் ஏற்படும்.

இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். எனவே சரியான சைஸ் தேர்ந்தெடுத்து போடுவது அவசியம்.

முதுகுவலி அதிகமாகும் சரியான அளவை தேர்ந் தெடுக்காமல் விட்டால் ப்ரா பட்டைகள்

தோளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் முதுகு வலி அதிகமாக்கி விடும்.

இது டென்சனை அதிகமாக்கி விடும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் வேலையில் கவனக் குறைவை ஏற்படுத்தி விடும்.

மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிக அளவில் டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு, முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படும்.

உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடும். உடல் செல்களுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. 

இதனால் தலை பகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலை வலி ஏற்படும்.

மார்பு பகுதியில் அழுத்தம் அதிகமாவ தால் மார்பக வலி அதிகமாகி விடும்.

டைட்டா ப்ரா போடாதீங்க

மேலும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்று நோய்க்கு வழிவகுத்து விடும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்கள் ப்ரா போடும்போது அதிக அளவில் லூசாக போட்டாலும் ஆபத்து, அதிகம்

டைட்டாக போட்டாலும் ஆபத்துதான் எனவே சரியான அளவில் தேர்ந்தெடுந்து

போட்டால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
Tags: