நீங்கள் அழகாக தெரிய வேண்டுமா?

Fakrudeen Ali Ahamed
மனிதர்களின் அழகையும், கம்பீரத்தை யும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். 

ஆடை அணிய சில டிப்ஸ்

நாம் அணியும் ஆடைகள் தரமான தாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளை விக்காது, நமக்கும் அழகை தரும்.

என்ன மாதிரி யான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். 

வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியி லேயேயும், திருமணம் போன்ற பார்ட்டி களுக்கு சாதரண மாகவும் உடுத்திச் செல்வார்கள்.

இது சரியான தல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனை களை பின் பற்றுங்களேன். 

ஆடை அணிய சில டிப்ஸ் 

தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண காட்டன் துணிகளை 

உடுத்தினால் கூட நேர்த்தி யாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும்.

எனவே பேஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும். 

சீசனுக்கு ஏற்ற ஆடைகள் 

ஆடை உடுத்துவது அழகோடு தொடர் புடையது மட்டுமல்ல ஆரோக்கி யத்திற்கும் ஏற்றது. 

சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப் படுத்தும். 

கோடையில் காட்டன் டிரஸ் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப் படுத்தும்.

ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், “பளிச்’ வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும்.

இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெள்ளிக் கிழமை உடை 

வெள்ளிக் கிழமை என்றாலே சில ஸ்பெசல் தான் பெண்கள் என்றால் பட்டு வகையறாக்களில் தான் அலுவலகத் திற்கு கூட செல்வார்கள்.

வெள்ளிக் கிழமையன்று வெள்ளை நிற ஆடையில் செல்வது பாந்தமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 

பணியிடங் களுக்கு ஜீன்ஸ் ஆடை ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.

சுய விமர்சனம் 

எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? இது பிட் ஆகிறதா? 

என்று கண்ணாடி யின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுங்கள். 

சரியான உள்ளாடைகள் அணிவது தன்னம் பிக்கையை அதிகரிக்கும்.

அளவான நகைகள் 

அதே போல் அணியும் ஆடை களுக்கு ஏற்ற நகைகள், அணிய வேண்டும். இருக்கிறது என்பதற் காக அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டாம். 

அதிகமாக போட்டால் அழகு கூடாது ஆபத்து தான் அதிகமாகும்.

ஹேர்பேண்ட், காதணி, காலணி போன்றவை மேட்சாக இருந்தால் கூடுதல் அழகுதான். அதற்கேற்ப பொருட் களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

மதிப்பு அதிகரிக்கும் 

ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட 

நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும்.

விழாக்கால ஆடைகள் காக்ரா 

சோலி திருமணம், ரிசப்சன் போன்ற விசேஷங் களுக்கு ஏற்றது. வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்குப் போவது நிச்சயம்.

ஸ்‌ப்லிட் ட்ரெஸ் இந்த நீண்ட ட்ரெஸ்ஸில் உள்ள கட் நடக்கும் போது உங்கள் அழகான கால்களை தெரிய வைக்கும்.

எடை அதிகம் உள்ளவர் களும் அணியலாம். ட்ரா ஸ்ட்ரிங் ஷார்ட்ஸ், ஸ்ட்ரெச் டாப்ஸ் போ‌ன்றவை உட‌ல் அமை‌ப்பு அழகா‌க‌‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் வா‌ங்‌கி அ‌ணியலாம.

தேவையான அளவுக்கு இறுக்கி கட்டக் கூடிய வசதி உள்ள ஷார்ட்ஸ்சு‌ம் இ‌ந்த வகை‌யி‌ல் உ‌ண்டு. இது உடலோடு ஒட்டிய படி இருக்கும்.

பட்டன் ஜீன்ஸ், மல்டி கலர் ஷர்ட் போ‌ன்றவை காலேஜ், ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சி களு‌க்கு அணியலாம். 

மார்டனா கவும் அதே நேரத்தில் அடக்க மாகவும் தோன்ற வைக்கும்.

நீங்கள் அழகாக தெரிய

உங்களுக்கு இந்தியத் தோற்றம் வேண்டு மானால், பாந்தினி வேலை பார்டரில் செய்யப் பட்ட ஜீன்ஸ் அணிந்து, சாதாரண கலர் சட்டை உடன் அணியலாம்.

பாந்தினி பெல்ட் மற்றும் ஸ்கார்ஃப் அணியலாம். டேனிம் துணியை மேலும் அழகு படுத்துவது இப்போது பேன்சி ஆகி விட்டது.

கற்பனை வளம் மிக்கவர்கள் டெனிம் கடையில் லேஸ் வைத்து தைத்துக் கொள்ளலாம். 

அல்லது டெனிம்மில் தங்க, வெள்ளி நிற நூல் வேலைகள் வைத்து தைத்துக் கொள்ளலாம்.

மினி உடைகள் 

கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சிலர் மினி ட்ரஸ் அணிந்து செல்வார்கள். உங்களுக்கு வேண்டு மானால் அது ஏற்றதாக இருக்கலாம். 

ஆனால் உங்களை பார்ப்பவர் களுக்கு அது உறுத்தலாக இருக்கும்.

ஸ்போர்ட்ஸ் மினி உடைக‌ள் டென்னிஸ், பாஸ்கெட் பால், வாலி பால் போ‌ன்ற ‌விளையா‌ட்டு களை ‌விளையாடு‌ம் போது மட்டுமே அணிய ஏற்றது.
Tags: