மெனோபாஸ் – மாதவிடாய் மறையும் காலம் !

Fakrudeen Ali Ahamed
பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது.  
இதனையே மெனோபாஸ் எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது.

மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது. மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள்.

இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம்  ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.
சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம். சுமார் 30 சதவிகித பெண்களுக்கு பல தொல்லைகளை தரலாம்.

மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள்  மெனோபாஸ்  பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.  

Tags: