மெனோபாஸ் தரும் பிரச்சினைகள் !

Fakrudeen Ali Ahamed
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து,

பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ்.

மெனோபாஸ் தரும் தொல்லைகள் !

• திடீரென சூடாக உணர்வது

• திடீரென இரவில் வியர்ப்பது

• யோனி உலர்ந்து காணப்படுவது

• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)

• சருமம் உலர்ந்து காணப்படுவது

• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது

• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.

இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும்

அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால்

மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.

உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும்.

மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.

பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள்  உடல் இயக்கத்துக்கும்,

குழந்தைகள் பெறுவதற்கும் தேவை. (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன் களையும் உற்பத்தி செய்கிறது.

மெனோபாஸ் ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது.

இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்று விடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்று விட்டால் காரணங்கள்.

கதிரியக்கம்  புற்று நோய் மருந்துகளின் பக்க விளைவுகளால், புகைபிடித்தல், சினைப் பைக்கு  ரத்த ஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்து விடுவது  போன்றவை.



Tags: