நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை

Fakrudeen Ali Ahamed
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் மெனோபாஸ் வராமல் பாதுகாக்கும்.

• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.

• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

• நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளி லிருந்து விடுபடலாம்.

மெனோபாஸ்

நாற்பத்தைந்தி லிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்று போவதைத் தான் மெனோபாஸ் என்கிறோம்.

பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

இந்தக் கால கட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:

ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில்

ஏற்படக்கூடிய மாறுதல்கள் தான் மெனோபாஸ் ஆரம்பமாகி யிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி.

மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங்,

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.

உடல் முழுவதும் உச்சந் தலையி லிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும்.

இதற்கு hot f* ushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot f* ushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கி விடும்.

ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள்.

அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது,

சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக் கூடியவை.

உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.

எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும்,

இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும்.

இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி.

இந்த மாற்றங்களுக்குக் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது.

இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம்.

பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு,

கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல் படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்.

கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான்.

மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HD* _ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான * D* _ஐ.. குறைத்து

பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்

வாய்ப்பு மிகக் குறைவு.

மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும்.

இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதய நோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது.

ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும்.

ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்க விளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.



Tags: