மேனோபாசிற்கான சிகிச்சை முறை !

Fakrudeen Ali Ahamed
மாதவிடாய் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்கள் சென்றால் மெனோபாஸ் (Menopause) உண்டாகிறது என்று சொல்லலாம்.
மேனோபாசிற்கான சிகிச்சை முறை !
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் அளவுகளில் மாற்றம், கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு பெண் ஹார்மோன்களான இது சூடான ஃப்ளாஷ் மற்றும் யோனி வறட்சி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
 
மெனோபாஸ் என்பது பெண்களுக்கு இயற்கையாக முதுமையின் தொடக்கத்தில் உண்டாகும் இயல்பான நிகழ்வு. மேலும் இந்த காலம் பெண்களின் இனப்பெருக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்வும் கூட.

மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருவாயில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். 
 
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பு வறட்சி, திடீரென உடல் வெப்பநிலை அதிகரிப்பு, குளிர்ச்சி, இரவு நேரத்தில் வியர்த்தல் 
 
மற்றும் தூக்க பிரச்னைகள் போன்ற இன்னும் பல அறிகுறிகள் ஏற்பட்டு, மெனோபாஸ் நேரத்தில் பிரச்னையை அதிகப்படுத்தும். 
 
அதிலும் உடலின் வெப்பநிலை ஏறி இறங்குவதோடு, வருடக் கணக்கில் இந்த அறிகுறிகள் நீளும். 
 
மேனோபாசிற்கான சிகிச்சை முறை !

ஆயுர்வேதம் முறை
மேனோபாசிற்கான சிகிச்சை முறை !
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.

ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங் களான

மூலிகை களையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை. வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

மருத்துவம் முறை
மேனோபாசிற்கான சிகிச்சை முறை !
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து  பருகி வரலாம்.

அதிமதுரம்  வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.



Tags: