கர்ப்ப கால நீரிழிவு நோயின் உணவு முறை எப்படி?

Fakrudeen Ali Ahamed
*ஓர் உணவியலாளர் உதவியுடன் தேவையான கலோரி உணவைக் கணக்கிட்டு அதற்கேற்ப உணவுத் திட்டம் அமைத்துக் கொள்வது நல்லது.

*பொதுவாகச் சொன்னால், சரியான உடல் எடை உள்ளவர்களு க்குத் தினமும் 2000-2500 கலோரிகளும், உடற்பருமன் உள்ளவர்களுக்கு 1200 - 1800 கலோரிகளும் தேவை.

*இனிப்பையும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும்.

*தானிய உணவுகள், கிழங்கு மற்றும் வேர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*அரிசிக்குப் பதிலாக, கோதுமை, கேழ்வரகு சேர்த்துக் கொள்ளலாம்.

*நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

*ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் இவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.

*பழச்சாறுகளு க்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

*வறுத்த, பொரித்த உணவுகளையும் கொழுப்பு மிக்க உணவுகளையும் ஓரங்கட்டுங்கள்.

Tags: