கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை?

Fakrudeen Ali Ahamed
உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு கட்டுப்படாத வர்களுக்கு இன்சுலின் தான் சிறந்த சிகிச்சை. 
காரணம், இன்சுலின் தொப்புள் கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. 

இதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுவ தில்லை. எனவே, இன்சுலினைப் பிரசவம் ஆகும் வரை தொடர வேண்டியது முக்கியம்.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை குளுக்கோ மீட்டர் மூலம் அவர்களாகவே ரத்தச் சர்க்கரையை டெஸ்ட் செய்து கொள்ளலாம். 

அதற்கேற்ப இன்சுலின் போட்டுக் கொள்வது, உணவு முறையை சரிப்படுத்துவது, தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி 

அல்லது உடற்பயிற்சி செய்வது ஆகிய வற்றின் மூலம் ரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த வேண்டியது இன்னும் முக்கியம்.

கர்ப்பிணிக்கு 28 வாரங்களு க்குப் பிறகு மாதம் ஒருமுறை வயிற்றை ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ செய்து, குழந்தையின் வளர்ச்சியையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.



Tags: