கர்ப்ப கால நீரிழிவு நோய் பரிசோதனைகள்?

Fakrudeen Ali Ahamed
முதல் முறையாகக் கர்ப்பம் தரித்தவர்களுக்கு ‘நீரிழிவு உள்ளதா’ என்பதைத் தெரிந்து கொள்ள மருத்துவரிடம் வரும் 
முதல் ‘விசிட்’டில் வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்தும் ரத்தச் சர்க்கரை டெஸ்ட் செய்யப்படும்.

வெறும் வயிற்றில் இதன் அளவு 90மி.கி/டெ.லி.,க்கு அதிகமாகவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120மி.கி/டெ.லி.க்கு அதிகமாகவும், 

ஹெச்பிஏ1சி அளவு 6%-க்கு அதிகமாகவும் இருந்தால், அவருக்கு நீரிழிவு உள்ளது என்று அர்த்தம். 

அந்த கர்ப்பிணிக்கு நீரிழிவு நிபுணரின் உதவியுடன் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகள் பரிந்துரைக்கப் படும்.

அதன் பிறகு, கர்ப்பம் தரித்த 16-வது வாரம் ‘ஓ.ஜி.டி.டி’(OGTT)டெஸ்ட் செய்யப் படுகிறது. 

கர்ப்பிணிக்கு 75 கிராம் குளுக்கோஸ் குடிக்கத் தருகிறார்கள். 2 மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரையைப் பார்க்கிறார்கள்.

அது 140மி.கி./டெ.லி-க்குக் கீழ் இருந்தால், நீரிழிவு இல்லை. அதற்கு அதிகமாக இருந்தால், நீரிழிவு உள்ளது. 

நம் நாட்டில் எல்லா கர்ப்பிணி களுக்கும் இந்தப் பரிசோதனை அவசியம். 

சிலருக்கு 24-வது வாரமும், 32-வது வாரமும் இதை மறுபடியும் மேற்கொள்ள வேண்டியது வரலாம்.

ஹெச்பிஏ1சி (HbA1C) டெஸ்ட் கர்ப்பிணிக்குக் கடந்த மூன்று மாதங்களில் ரத்தச் சர்க்கரை கட்டுப் பாட்டில் இருந்ததா, இல்லையா என்பதைத் தெரிவிக்கும் டெஸ்ட் இது.

கர்ப்பம் ஆரம்பித்த நாளில் இருந்தே நீரிழிவு கட்டுப் பாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

இதன் அளவு 6% என்று இருந்தால் நீரிழிவு இல்லை. 6%-க்கு அதிகமாக இருந்தால் ஏற்கெனவே நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம்.

ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு கர்ப்பிணிக்கு, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 90மி.கி./ டெ.லி. வரை, 

சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120மி.கி./டெ.லி. வரை, ஹெச்பிஏ1சி அளவு 6%-க்குக் கீழே என்று இருந்தால், 

அவருக்கு நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்று சந்தோஷப் படலாம். இந்தக் கட்டுப்பாடு பிரசவம் ஆகிற வரை தொடர வேண்டும்.



Tags: