பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !

Fakrudeen Ali Ahamed
‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்றொரு பழமொழி உண்டு. அதை நிஜமாக்கும் வகையில், இன்று நிறைய பெண் களுக்கு முகத்தில் மீசையும், தாடியும் முளைக் கிறது.

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !
‘ஸோ வாட்? பார்லர்ல போய் திரெடிங்கோ, வாக்சிங்கோ பண்ணிட்டா போச்சு’ என்று  அலட்சியம் செய்கிற பல பெண் களுக்கும் பாவம், அதன் பின்னணி யில் ஒளிந்தி ருக்கும் அபாயம் தெரிவ தில்லை!

‘‘20&25 வயசுப் பெண்கள் கிட்ட இந்தப் பிரச்னை அதிகமா இருக்கு. முகம், கை, கால்னு உடம்பு முழுக்க முடி வளர்ச்சி, பருமன், தடிச்சும் கருத்தும் போன சருமம், 
 
பரு, வழுக்கைனு பல பிரச்னைகளோட வராங்க. வழக்கமான அழகு சிகிச்சைகள் இவங்களுக்கு சரி வர்றதில்லை.

காரணம், அவங்களோட பிசிஓடி பிரச்னை! சில பேர் இது தெரிஞ்சும், பல பேர் தெரியா மலும் சிகிச்சைக்கு வர்றாங்க.

மேல சொன்ன பிரச்னைகளோட வர்றவங்களை பிசிஓடி இருக்கானு செக் பண்ணச் சொல்றது தான் இப்பல்லாம் என்னோட முதல் அட்வைஸ்’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அதென்ன பிசிஓடி?

பெண்களு க்கு மீசை முளைக்கச் செய்வதில் இருந்து, மலட்டுத் தன்மை வரை பல பிரச்னை களுக்கும் காரணமான சினைப்பை நீர்க்கட்டிகள் தான் பிசிஓடி (Polycystic Ovarian Disorder )  என்பது!

புரிகிற வார்த்தை களில் சொல்வ தானால், பெண்களு க்குள் ஆண் தன்மையை அதிகரிக்கச் செய்கிற ஹார்மோன் அரக்கன்! 
மலட்டுத் தன்மைக்கான சிகிச்சை
‘‘மலட்டுத் தன்மைக்கான சிகிச்சை க்கு வர்றவங்கள்ல 50 சதவீதப் பெண்களு க்கு இந்தப் பிரச்னை தான் பிரதான காரணமா இருக்கு.

ஒவ்வொரு பெண்ணோட உடம்புலயும் எஃப்.எஸ்.ஹெச்னு சொல்ற பெண் ஹார்மோனும், எல்.ஹெச்னு சொல்ற ஆண் ஹார்மோனும் இருக்கும்.

சாதாரணமா இது 2:1 என்ற விகிதத்துல இருக்கும். சினைப்பை நீர்க்கட்டி இருக்கிற பெண் களுக்கு பெண்மை க்குக் காரணமான எஃப்.எஸ்.ஹெச் கம்மியாகவும், எல்.ஹெச் அதிகமாகவும் மாறும்.

அதன் விளைவா முகத்துலயும் மார்பகங் கள்லயும் புருவங் கள்லயும் ஆண்களைப் போல முடி வளர ஆரம்பி க்கும். முடி வளர வேண்டிய தலைப் பகுதில வழுக்கை விழும்.

இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும். அதனால வளர்சிதை மாற்றங்கள் உண்டாகி, ஆண்களைப் போலவே உடம்புல எடை அதிக மாகும். அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கறுத்து, பருக்கள், கரும் புள்ளிகள் வரும்.
பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !
ிரச்னை தீவிரமானா, சிலருக்கு குரல் கூட மாறலாம். ஹார்மோன் களை கட்டுப் படுத்தற மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியை பாதிச்சு, அதன் விளைவா சினை முட்டை வளர்ச்சி சரியில்லாமப் போய், மாதவிலக்கு தள்ளிப் போகும்.

கருத்தரிக் கிறதுல சிக்கல் வரும். அப்படியே கருத்தரி ச்சாலும் குழந்தை யோட வளர்ச்சி பாதிக்கப் படலாம். குறைப் பிரசவ அபாயமும் உண்டு...’
 
அதிர வைக்கிற தகவல்களுடன் பேச ஆரம்பிக் கிறார் சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த ஆய்வுகளை முடித்திருக்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘சினைப் பைக்குள்ள சினை முட்டைகளோட சேர்த்து சின்னச் சின்ன கட்டிகளும் இருக்கும். அப்ப டியிருந்தா, சினைப்பை வீங்கி, பெரிசாகும். சினைப்பை நீர்க்கட்டிகள் வர பருமனும் வாழ்க்கை முறை மாறுதல் களும் தான் முக்கிய காரணங்கள்.

மன உளைச் சலாலும், அபூர்வமா சிலருக்கு பரம்பரை யாகவும் கூட இந்தப் பிரச்னை வரலாம். 
 
மாதவிலக்கு தள்ளிப் போக மாத்திரைகள் எடுத்துக் கிறவங் களுக்கு, ஹார்மோன் சமநிலை மாறிப் போய், திடீர்னு பிசிஓடி வரலாம்.
இவர்களுக்கு நீரிழிவு வரும் அபாயமும் 5 மடங்கு அதிகம். திருமண மான, திருமண மாகாத எந்தப் பெண்ணுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சை களால் மாதவிலக்கு சுழற்சியை சரிசெய்து, கருத்தரிக்கச் செய்யலாம்.

தொடர்ந்து உணவுக் கட்டுப்பாடு, பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்தல் என வாழ்க்கை முறையை சரியாக்க வில்லை எனில், திரும்பவும் பிசிஓடி வரும்’’ என்கிற ஜெயராணி, பருமன் விஷயத்தில் பெண்களுக்கு அதிக அக்கறை அவசியம் என வலியுறுத் துகிறார்.
பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !
‘அதுக்காக ஒல்லியான பெண்களுக்கு பிசிஓடி வராதுன்னு அர்த்த மில்லை. மாத விலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களும், திடீர்னு எடை அதிகரிக் கிறவங்களும், திடீர் மன உளைச் சலுக்கு ஆளான வங்களும் பிசிஓடி இருக்கானு டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும்.
 
மன உளைச் சலுக்கு கவுன்சலிங், எடை அதிகரிப்பு க்கு உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, வழுக்கை க்கும் உடம்புல அதிகரிக்கிற ரோம வளர்ச்சி க்கும்

சரியான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள், ஹார்மோன் மாறுபாடு களுக்கு சிகிச்சைனு, பிசிஓடியை 90 சதவீதம் குணப்படுத்திட முடியும்.

கவனிக்காம விட்டா, கொழுப்பு அதிகமாகி, இதய நோய்கள் வரலாம். பொதுவா 60 வயசுக்கு மேல வரக்கூடிய  கர்ப்பப்பை உள் சுவர் புற்றுநோய், பிசிஓடி உள்ளவங் களுக்கு இள வயசுலயே வரலாம்’’ எச்சரிக்கிறார் டாக்டர் ஜெயராணி.
Tags: