சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும்.
ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள்.
அவ்வாறு நினைக்க வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்.
இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்ப்போமா!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.
ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார் மோனானது அண்ட விடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது.
இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும்.
நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லா விட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத் திற்கு பின் நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும்.
எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகளை செய்து வர வேண்டும்.
இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும். பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும்.
ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும்.
சொல்லப் போனால் பொதுவாகவே அண்ட விடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறா விட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது.
அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாச மானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம்.
ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும்.
ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறா விட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.
சொல்ல ப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கி யமான உணவுகளை சாப்பிட்டாலே சரி செய்து விடலாம்.