தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

Fakrudeen Ali Ahamed
நாம் உணவு உண்ணும் போது முக்கிய மாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப் படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.
தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா?
தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா? பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவை யாகவும், காரசார மாகவும் இருக்கும். 
 
அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடு கின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனை களை சந்திக்க நேரிடும். 

அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கிய மான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனை களை ஏற்படுத்தும். 
அதில் அடி வயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக் கூடும். 

எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்ப தோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதை யும் தவிர்க்க வேண்டும். ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். 

ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாத வர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?
ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப் பட்டிருப்ப தால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். 

இல்லா விட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக் கூடும். ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடு களின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப் பட்டிருப்ப தால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தும். 
 
இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக் கூடும்.
Tags: