வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து என்று எச்சரிக்கும் மருத்துவர் !

Fakrudeen Ali Ahamed
3 minute read
0
அந்த காலத்தில் எல்லாம் வீட்டில் தானே பிரசவம் பார்க்கப்பட்டது? என்று நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன.
வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து என்று எச்சரிக்கும் மருத்துவர் !
பெண்களுக்கு மறுஜென்மம் என்று கூறப்படும் பிரசவகாலம் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்.
 
யாருக்கு அதிக ரத்த போக்கு ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது. அதற்கு ஏற்றாற் போல மருத்துவமனைகளில் ரத்தம் தயாராக வைக்கப்பட்டிருக்கும். 
 
வீட்டில் இதெல்லாம் யார் செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் மருத்துவர்.

நவீன மருத்துவம் இல்லாத அந்த காலத்தில் ’மருத்துவச்சி’ வந்து வீட்டில் பிரசவம்👈 பார்த்து வந்தார். மருத்துவச்சி என்றால் படிப்பறிவில்லாத மருத்துவர் என்று சொல்லலாம். 
 
சரியாக பிரசவம் நடைபெற்றால் சிசு உயிர் பிழைக்கும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும். 
 
அதனால் தான் பிரசவத்தை பெண்களுக்கு மறுஜென்மம் என்று கூறுகின்றனர். பிரசவம் என்றாலே அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது. 
 
இதற்கு பயந்து வீட்டிலே பிரசவம் பார்க்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய போது, அரசு மருத்துவமனைகளில் செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். 
 
பிரசவித்தலின்👈 போது மருத்துவமனையை அணுகுவதே சரியானது. மருத்துவமனையில் ஆகும் செலவை பார்த்தால், உயிர் போனால் பரவாயில்லையா? என்று கேட்கிறார் மருத்துவர்.
 வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து
மருத்துவம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு தான். 
 
இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்கிற ஃபார்வர்டு மெசேஜ்களால் ஈர்க்கப்பட்டு, 
 
பெண்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சில கணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும்.
கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியைச் சேர்ந்த அழகம்மாள், கணவர் விஜயவர்மனின் பேச்சை நம்பி, 
 
கருத்தரித்த👈 நாளிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்ததோடு, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதற்கும் சம்மதித்து இருக்கிறார். 

விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வருபவர். 
 
அவருடைய ஆலோசனையின்படி தான் இப்படியொரு ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்கள் விஜயவர்மனும் அழகம்மாளும்.

விளைவு, சிசு இறந்து அழுகிய நிலையில் வயிற்றிலேயே இருந்திருக்கிறது. ஸ்கேன் செய்யாததால் இது எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறார் அழகம்மாள். 
 
இந்த நிலையில் நேற்று அழகம்மாளுக்கு வயிற்றுவலி ஏற்பட, சிசு பாதி வெளியேறிய நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல்👈 ஏற்பட பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 
 வீட்டில் பிரசவம் பார்ப்பது
அதிக ரத்தப்போக்கு காரணமாக, வழியிலேயே அழகம்மாள் இறந்து விட்டார். இவர் பி.எஸ்ஸி நர்சிங் படித்தவர் என்பதுதான் உச்சகட்ட வேதனை. 
 
இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்னால், திருப்பூரில் ஒரு தம்பதியர் வீட்டிலேயே பிரசவம் செய்ய முயல, 
 
அழகம்மாள் போல அந்த இளம் தாயும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் உயிரை இழந்தார்.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால், ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர் சொல்வதைக் கேளுங்கள். 
 
பிரசவம் நடக்கும் இடம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். 
 
இல்லை யென்றால், தாய்க்கும் சேய்க்கும் தொற்று நோய்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு மருத்துவமனைகள் மட்டுமே சரியான இடமாக இருக்க முடியும்.

பிரசவ வலி அதிக நேரம் இருந்தால், அந்த வலியை அதிகப்படுத்த டிரிப்ஸ் போட்டு, சீக்கிரம் டெலிவரியை முடிக்க வேண்டும். இல்லையென்றால், தாய்க்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்து விடும். 
 
கர்ப்பப்பையின் வாய் நிமிடத்துக்கு நிமிடம் விரிந்து கொண்டே வந்து திறக்கும். அதை மருத்துவர் தான் சரியாகக் கண்காணிக்க முடியும்.

குழந்தை வெளியே வருவதற்கு முன்பே பனிக்குடத்தின் நீர் முழுவதும் வெளியேறிவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறும் ஆபத்து ஏற்படலாம்.
வீட்டில் பிரசவம்
தாயின் உறுப்பைவிடக் குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், குழந்தையை வெளியே எடுக்க முடியாது. இதற்கு மருத்துவரின் உதவி கட்டாயம் தேவை.

குழந்தையின் தலை வெளியே வரமுடியாமல் உள்ளேயே மாட்டிக் கொள்ளலாம். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 
 
பெண்ணுறுப்பை நோக்கிக் கீழே இறங்க வேண்டிய தலை, கர்ப்பப்பையின் பக்கவாட்டிலோ, மேற்புறமாகவோ நின்று விட்டால், பிரசவம் சிக்கலாகி விடும்.
 
குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி சரியாக வெளியே வந்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
இல்லை யென்றால், உடனடியாக மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து நஞ்சுக் கொடியை வெளியே எடுக்க வேண்டும். இதை வீட்டில் எப்படிச் செய்ய முடியும்?

குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பையைச் சுருங்கி விட்டதா என்று செக் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
 நஞ்சுக் கொடி
பிரசவத்தின் போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால், அதைத் தடுக்கும் மருந்தை டிரிப்ஸில் கலந்து தாய்க்கு ஏற்றி, அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும். 
 
டிரிப்ஸுக்குக் கட்டுப்படவில்லை எனில், கர்ப்பப்பையின் வாயில் சின்ன தையல் போட்டோ, சிறிய ஆப்ரேஷன்👈 செய்தோ தாயைக் காப்பாற்ற வேண்டும். 
 
டிரிப்ஸ், தையல், ஆபரேஷன் இதெல்லாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் போது செய்ய முடியாது.
 
குழந்தை பிறந்ததும் அதைக் கவனித்துக் கொள்ளவும், ஏதாவது பிரச்னை என்றால் காப்பாற்றவும், குழந்தைகள் நல மருத்துவர் அருகில் இருக்க வேண்டும். 
 
ஒரு தாய்க்குப் பிரசவம் நடக்கும் போது, மேலே சொன்ன அத்தனை உதவிகளும் அருகே இருக்க வேண்டும். இல்லை யென்றால், அது உயிரிழப்பை ஏற்படுத்தி விடலாம். 
 
பெண்களுக்கு சுகப்பிரசவமாக

நல்ல உடற்பயிற்சி
நல்ல உடற்பயிற்சி
காலை எழுந்தவுடன் நல்ல சூழலில் பிராணாயாமா, அதாவது மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
 
மொட்டை மாடியிலோ, வீட்டுத் தோட்டத்திலோ அதிகாவையில் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.

உடல் அசைவு அவசியம்
உடல் அசைவு அவசியம்
தரையில் அமர்ந்து காய்கறிகள் நறுக்குவது, தரையில் அமர்ந்து உண்ணுவது போன்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டும். 
 
கீழே அமர்ந்து எழுந்தால் தான் இடுப்பு எலும்புகள் இடையில் உள்ள ஜவ்வுப்பகுதி விரிவடைந்து பிரசவத்தின் போது, குழந்தையின் தலை எளிதாக வெளிவர உதவும்.
எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும் எப்படி ?
தற்போதைய காலகட்டத்தில் டைனில் டேபிளில் அமர்ந்து உண்ணுவது, மேடையில் வைத்து நின்று கொண்டே காய்கறி நறுக்குவது என்று அனைத்தும் மாறிவிட்டதாக மருத்துவர் குறிப்பிடுகிறார்.
 
அதனாலேயே பலருக்கும் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்கிறார் அவர்.

சத்தான உணவுகள்
சத்தான உணவுகள்
நல்ல இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை வகையையாவது எடுத்துக் கொள்வது அவசியம். 
 
முலைக்கீரை, அரக்கீரை போன்று அவரவர் உடலுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு கீரை வகையை உட்கொள்ளலாம்.
வயாகரா அதற்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம் !
அதே போல தினமும் பழம் எடுத்துக் கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். ஆப்பிள், திராட்சை மற்றும் வாழை பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, யோகா செய்வது, நிம்மதியான தூங்குவது அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 14, April 2025