குழந்தை வயிற்றி லிருக்கும் போது கூந்தல் உதிர்வது இயல்பு. இதற்கு ஊட்டச் சத்துக்களை சமன் படுத்தினாலே போதும், இயற்கை யாகக் கூந்தல் வளர்ச்சி பெறும்.
ஜின்க், ஃபோலிக் அமிலங்கள், வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
அடர் பச்சை நிற காய்கறிகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானியங்கள், பச்சைப் பட்டாணி, பயறு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
டை பயன்படுத்தல் கூடாது.
தேவையெனில் ஹென்னா பயன்படுத்தலாம்.
வாழை மற்றும் மெலான் வகை பழங்களை சாப்பிடுவதால், கூந்தல் நன்கு வளரும்.
ஒரு கப்பில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மெரி எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, எலுமிச்சைச் சாறு இவற்றை யெல்லாம் தேவையான அளவில் கலந்து கூந்தலில் பூசிவந்தால், இயற்கை யாகவே கூந்தல் வலுப் பெறும்.
ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சமஅளவில் எடுத்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வலிமை பெறும்.
தேங்காய் பாலை கூந்தலில் பூசி 2030 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசலாம்.