பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க !

Fakrudeen Ali Ahamed
சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவத்தைக் கேள்விப் பட்ட பலரும் அதிர்ச்சியடைந் திருப்பார்கள்.
பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க !
‘பரிசோதனைக் காகச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லேப் டெக்னீஷியன் கைது’ என்ற அந்தச் செய்தி பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பியிருக் கிறது. 
 
மருத்துவர்கள் தொடுவதையோ உடலைப் பார்ப்பதையோ தவறாக நினைக்கத் தோன்றாதவர் களுக்குக் கூட இது அச்சத்தை உருவாக்கி யிருக்கிறது. 
 
பெண் நோயாளி களைக் கையாள மருத்துவர் களுக்கும், லேப் டெக்னீஷியன் களுக்கும் என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன? 
என்னென்ன வழிகளில் பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியான ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம். 
 
பெண் நோயாளி களை இப்படித்தான் கையாள வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனால், மருத்துவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிமுறைகள் இருக்கின்றன.

இதுபோன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் மருத்துவத் துறையில் நடப்பதில்லை. மருத்துவம் படிக்கும் போதே உடலியல் பற்றிய தெளிவான ஒரு புரிதல் மருத்துவர்களுக்கு ஏற்பட்டு விடும். 
 
இதனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பார்ப்பதனாலோ, தொடுவதனாலோ எந்த உணர்வும் மருத்துவருக்கு ஏற்பட்டு விடாது.

நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். பரிசோதனை செய்கிற ஆய்வாளர் களுக்கும் இது பொருந்தும். 
 
அரசு மருத்துவ மனைகளில், நோயாளிகளுக்கு என்ன பரிசோதனை செய்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடி அறைக்குள் தான் பரிசோதனை நடக்கும்.
நோயாளியுடன் வந்திருப்ப வர்களும் மருத்துவரும் கண்காணிக்கும் வகையிலேயே இந்த அறை அமைந்திருக்கும். 
 
தனியார் மருத்துவ மனைக்குச் செல்லும் பெண் நோயாளிகள், இந்த விதிமுறைகள் அங்கு பின்பற்றப் படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். 
 
பரிசோதனைக் காகச் செல்லும் போது, தங்களுடன் ஒருவரை நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் பெண்ணாகவோ, கணவராகவோ இருப்பது நல்லது.
 கன்னத்தில் உருவாகும் கவர்ச்சிக் குழி - ஒரு பேரழகு தான் !
பரிசோதனை செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பெண் லேப் டெக்னீஷியன் இருக்கிறார்களா என்பதையும், பரிசோதனைக்காக 
 
மருத்துவ மனையில் அதற்கென பிரத்யேகமான உடை (கவுன்) கொடுக்கி றார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.
பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க !
பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வர வேண்டும்.  நகை, சங்கிலி போன்ற ஆபரணங்களை பரிசோதனைக்கு முன்பு உடன் அழைத்து வந்தவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும். 
வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?
மருத்துவமனை ஊழியர்களிடமோ, மற்றவர்களிடமோ கொடுக்கக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார். பரிசோதனை எப்படி செய்யப் படுகிறது என்று ரேடியாலஜிஸ்ட் விமல்ராஜிடம் கேட்டோம்.

‘பரிசோதனைக்கு முன்பு அதற்கென இருக்கும் பிரத்யேக உடைக்கு மாற வேண்டும். உடை மாற்றிய பிறகு, பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்வார்கள். 
 
நோயாளியை ஸ்கேனரில் சரியான முறையில் லேப் டெக்னீஷியன், நர்ஸ் ஆகியோர் படுக்க வைப்பார்கள். இந்த நேரத் தில், நோயாளியுடன் வருபவர் இருக்கலாம்.

சரியான முறையில் அமர்த்திய பிறகு, லேப் டெக்னீஷியன், நர்ஸ், உடன் வந்தவர் என எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்து விடுவார்கள். 
 
வெளியிலிருந்து கணிப்பொறியின் உதவி மூலம் பரிசோதனை நடக்கும். பரிசோதனைக்கு வந்தவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஸ்கேனருக்குள் ஒரு கேமரா இருக்கும்.

நோயாளி எதுவும் சொல்ல விரும்பினால் அந்த கேமரா மூலம் தகவல் சொல்ல லாம். உள்ளுக்குள் ஏதேனும் அசவுகரியம் என்றால், உடனடியாக சோதனை செய்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கான வசதி இது.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
இதைத் தவிர வேறு ஏதேனும் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனே நீங்கள் சுதாரித்துக் கொள்ளலாம். 
 
தனியார் மையங்களில் பரிசோதனைக்குச் சென்றிருந்தால் உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, நாமே ஒரு மையத்தைத் தேடிச் சென்று பரிசோதனை செய்து கொள்வதை விட மருத்துவர் பரிந்துரைக்கும் மையத் தில் பரிசோதனை செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது.

போலி மருத்துவர்கள் கைது என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். அது போல், தவறான ஆட்கள் இந்தத் துறையில் இருந்தால், இது போன்ற சூழ்நிலைகளைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு.
பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க !
அதனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுத்துத் தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். 
 
பரிசோதனைக்கு என்று மட்டும் இல்லாமல் ஆலோசனை க்குச் செல்லும் போது கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது’ என்கிறார்.
தொழில் நுட்பங்களும் தவறுகளும் மலிந்து விட்ட காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றே நம்மைக் காப்பாற்றும் என்பதால் நம்முடைய பாதுகாப்பு நம் கையில் தான்! 
 
பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வரவேண்டும். - எஸ்.கே.பார்த்தசாரதி
Tags: