உண்மையில் பெண்கள் சிரிக்கும் போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகு தான்! இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கன்னத்தில் உருவாக்கலாம் கவர்ச்சிக் குழி
பெண்கள் அழகில் பளிச்சென்று திகழ வேண்டும் என்றால் அவர் களது கன்னங்கள் மொழு மொழுப்பாக ஜொலிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள்,
இப்போது கன்னங்களில் கூடுதலாக இன்னொன்றையும் எதிர் பார்க்கிறார்கள்.
அது கன்னக்குழி. கன்னத்தில் குழிவிழுந்தால் அது கவர்ச்சியை அதிகரிக்கிறது என் கிறார்கள்.
உண்மையில் பெண்கள் சிரிக்கும்போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகுதான்! ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும்,
இந்திய நடிகை பிரீத்தி ஜிந்தாவும் மட்டும் அதற்கு எடுத்துக்காட்டு அல்ல! பக்கத்து தெருவில் வசிக்கும் பெண்களும் கன்னத்தில் குழி விழுந்தால் அழகாகத்தான் இருக்கிறார்கள்.
அந்த அழகை பார்த்து ரசிக்கும் ஆண்களில் பலர், ‘சில பெண்களை மட்டும் இறைவன் நிதானமாக ரசித்து படைத்திருக் கிறான்.
அவர்களது கன்னங்களில் மட்டும் குழி விழுகிறது’ என்பார்கள்.
இனி அப்படி சொல்ல முடியாது. செயற்கையாகவே டாக்டர்களால் கன்னத்தில் அழகுக்குழி அமைக்கப் படுகிறது.
இயற்கையான கன்னக் குழிகளில் இருவகை இருக்கிறது. முதல் வகையினருக்கு பேசும் போதும், சிரிக்கும் போதும் மட்டுமே குழி வெளிப்படும்.
இரண்டாவது வகையினருக்கு எப்போதும் பளிச்சென அந்த குழி தெரியும். பொதுவாக பெண்களுக்கு இயற்கையாக கன்னத்திலும், தாடையிலும் குழி விழுவதுண்டு.
கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?
கன்னங்களின் தசைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் குழிவிழுவதற்கான காரணம்.
முகத்தில் ‘ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர்’ என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது.
அந்த தசையின் தடிமனாலோ, தொடர் தசையில் ஏற்படும் பிளவாலோ குழி உருவாகிறது. முகத்தில் சேரும் கொழுப்பும் கன்னக் குழிக்கு காரணமாகிறது.
ஆனால் கொழுப்பு குறையும் போது அது மறைந்து விடும். இளமையில் குழி அழகோடு தோன்றினாலும் வயதாகும் போது அது காணாமல் போவதன் மாயம் இதுதான்.
இயற்கையாக குழி இல்லாதவர்கள், செயற்கையாக உருவாக்கிக் கொள்ளலாம்.
இது நவீன அழகு சிகிச்சையாகும். லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் குழியை உருவாக்கிவிடுகிறார் கள்.
முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில்கொண்டு குழியை உருவாக்கு கிறார்கள்.
ஆபரேஷன் முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி, பின்பு சிரிக்கும்போதும், பேசும்போதும் மட்டும் தெரியும்.
சரி.. செயற்கை குழி அழகாக இல்லாவிட்டால், குழியை மூடிவிடலாமா? அதற்கு எளிதான இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம்.