அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Fakrudeen Ali Ahamed
தினசரி அசைவம் சாப்பிடும் போது, நம் உடலுக்கு கொழுப்புச் சத்து அளவுக்கு அதிக மாகக் கிடைக் கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும் போது உடல் பருமன் ஏற்படு கிறது.

தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? 

நமது உடல் ஆரோக்கிய மாக இயங்க கார்போ ஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச் சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம்.

இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும் போதும் நம் உடலின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு ஏற்படு கிறது. நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக் கொள்ளும்.

உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவை யான ஆற்றலை உடல் தயாரித்துக் கொள்கிறது. தினசரி அசைவம் சாப்பிடும் போது, நம் உடலுக்கு கொழுப்புச் சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக் கிறது.

இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும் போது உடல் பருமன் ஏற்படு கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற வற்றுக்கு உடல் பருமன் தான் தலை வாசல்.
அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப் படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவ தால், மாரடைப்பு,

திடீர் இதயத் துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கும் கொழுப்பைக் கல்லீரல் தான் சேமித்து, தேவைப் படும் போது ஆற்றலாக மாற்றுகிறது.

இப்படிக் கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்து கொண்டே போகும் போது கல்லீரல் பாதிக்கப் படுகிறது. இதனால், கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.
Tags: