குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் !

Fakrudeen Ali Ahamed
0
பண்டைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காற்று தான் ஊட்டினார்கள். ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலேயே குழந்தைப் பருவம் தான் மிகவும் அழகானதாக இருக்க முடியும்.
குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
எப்போதும் காரணமே இல்லாத ஆனந்தம், யார் மீதும் வெறுப்பை சுமக்காத மனோபாவம், மன்னிப்பு மற்றும் மறத்தல் போன்று பெரிய குணங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகக் குழந்தைகளுக்கு இயல்பாகவே வழிந்து வரும்!

ஆட்டம் ஓட்டம் என்று பட்டாம்பூச்சிகளாய் துள்ளித்திரியும் குழந்தைகளாகத் தான் நாம் நம் சிறிய வயதில் இருந்தோம்! நம் தம்பி தங்கைகள் குழந்தைகளாக இருந்த போதும் இந்தக் காட்சிகளையே பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்!

ஆனால் இன்று நம் குழந்தைகள் அப்படி இருக்கிறார்களா? பதிலைச் சொல்லவே பயமாக உள்ளது. இல்லவே இல்லை! அவர்கள் யார் முகத்தையும் சரியாக நிமிர்ந்து பார்ப்பது இல்லை. சிரிப்பதில்லை. 
எந்த பாலை எப்படி காய்ச்சுவது
எல்லோருடனும் கூடிப் பழகுவதில்லை. ஓடி விளையாடுவது இல்லை. குழந்தைகள் இயல்பாக செய்யும் பல விசயங்களை அவர்கள் செய்வதில்லை! இதற்குக் காரணம் என்ன? நவீன ஸ்மார்ட் போன் தான்!
நவீன ஸ்மார்ட் போன்
இந்த ஸ்மார்ட் போன்களால் எத்தனையோ வகையான நல்ல விசயங்கள் நடக்கட்டும்! ஆனாலும் இது குழந்தைகளின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. 
 
அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை.
கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? ‘மாயத் தோற்றம்’ !
அவ்வாறு குழந்தைகள் செல்போன் நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதிக நேரம் குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் ஓடி ஆட மறந்து விடுகிறார்கள்.

ஒரே இடத்தில் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறித்து விடுகிறது.
கதிர்வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறித்து விடுகிறது.
இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது. 
 
இரவு முழுவதும் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பள்ளிக்குச் சென்று குழந்தைகள் அங்கு தூங்கி விடுகிறார்கள். 
 
அது மட்டுமன்றி நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அது மட்டுமன்றி மிக விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.
ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் 23 வயது பெண்
எனவே இனிமேல் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து பழகாதீர்கள். இதுதவிர வீட்டில் தனியாகப் பல பெண்கள் குழந்தையை கவனித்து வருகின்றனர். 
 
இவர்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு குழந்தையும் பராமரிக்கின்றனர். இவர்கள் தங்கள் வேலைகளைத் தொந்தரவில்லாமல் எடுத்துக்கொள்ள வழி தேடுகின்றனர்.
செல்போன் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதற்கு உபயமாக செல்போனைப் பயன்படுத்துகின்றனர். செல்போனை கொடுத்து குழந்தையை அமர்த்தி விட்டால் அது ஆடவும் செய்யாது அசையும் செய்யாது.
ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப் பட்டது?
இன்று ஸ்மார்ட்போன்களில் கண்களைக் கவரும் பலவிதமாக வீடியோக்கள் மற்றும் லட்சக்கணக்கான கேம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
 
இதைப் பார்க்கும் குழந்தைகள் மன ரீதியாகத் தூண்டப்படுகின்றனர்.அதனால் செல்போனுக்கு அடிமையாகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)