பெண்கள் தாய்மை அடைய விடாமல் தடுக்கிறான் !

Fakrudeen Ali Ahamed
0
பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள். 
பெண்கள் தாய்மை அடைய விடாமல் தடுக்கிறான் !
எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம் பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. 
 
தற்போது இந்த பாதிப்புக்குள்ளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, 
டைனோசரின் ராட்சத தொடை எலும்பு?
உடல் பருமனால் ஏற்படும் பி.சி.ஓ.எஸ்., எனும் 'பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்' பிரச்னையே பல பெண்களை தாய்மையடைய விடாமல் தடுக்கிறது என்கிறார் டாக்டர் பூங்கோதை.

இது குறித்து திவ்யா மருத்துவமனையின் பவ்யா கருத்தரித்தல் மைய நிபுணர் பூங்கோதை, நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
 
பி.சி.ஓ.எஸ்., என்பது ஒருவகை மரபணு சம்பந்தப்பட்ட பிரச்னையே. முறையற்ற மாதவிடாய் சுழற்சி இதன் முக்கிய அறிகுறி.

பெண்களிடம் இது குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. பலர், 'நீர்க்கட்டி' பிரச்னை என, 'லேப்ராஸ்கோபி' அறுவை சிகிச்சை செய்கின்றனர். 
குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் !
உண்மையில் இவை சினைப்பையில் வளராமல் இருக்கும் சின்ன முட்டைகளே.பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த சில நாட்களிலே, 10-15 சினை முட்டைகள் வளர ஆரம்பிக்கும்.

இதில் ஒன்று பெரிதாகி, 16ம் நாள் வெடித்து முட்டையை வெளியேற்றும். மற்றவை உள்ளேயே கரைந்து விடும். மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் இந்த வேலையை செய்கிறது. 
பெண்கள் தாய்மை அடைய விடாமல் தடுக்கிறான் !
இவை சரிவர சுரக்கவில்லை எனில், சினைமுட்டை வளர்ச்சி தடைபட்டு முட்டைப்பையில் நீர்கோர்த்த அமைப்பை தோற்றுவிக்கிறது.

இது, கட்டிகள் கிடையாது.இதற்கு அடிநாதமாக இருப்பது உடல் பருமன். உடல் எடையை சரியான அளவில் பராமரித்தாலே ஹார்மோன் மாறுதல்கள் சரியாகி 
 
சினை முட்டை பையில் முட்டைகள் வளர்வதும், வெடிப்பதும் கட்டுக்குள் வரும்.கருத்தரித்தலும் எளிதாகும்.
அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு !
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாதவிடாய் கோளாறு இருக்கும் பட்சத்தில் உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம்.இவ்வாறு அவர், கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)