அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு !

Fakrudeen Ali Ahamed
மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, வித விதமான நோய் களைக் கரம்பிடித்து அழைத்து வந்து நம்மிடம் சேர்க்கிறது.
அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு !
அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப் படும் வயிற்றுப் புண்.

உலகில் எங்கெல்லாம் நத்தை உணவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது?

அல்சர்

அனுபவித்த வர்களுக்குத் தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்து விடும். 
 
இது உணவுக் குழாய், இரைப்பை மற்றும் சிறு குடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண்.

இது பாதிக்கப் பட்டவரைப் பலவிதத் தொந்தரவு களுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டி பயாட்டிக்ஸ் களைப் (Antibiotics) பயன் படுத்தி இதன் வீரியத்தைக் குறைக்க லாம்;

அல்சர் வருவதற் கான அறிகுறிகள் தெரியும் போதே தடுக்கலாம். அல்சரால் பாதிக்கப் பட்டவர்கள் எந்த வகை உணவு களைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உணவுப் பழக்க த்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபட்டு விடலாம்.

இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !

உணவு களில் கவனமாக இருந்தால், செரிமான மின்மை, வாயுத் தொல்லை, வாந்தி எடுத்தல், உணவைப் பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப் படும்.
வயிற்றில் ஏற்படும் கடுமை யான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்து விடலாம்.

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகள், பானங்கள் என்னென்ன?

ஆல்கஹால்
 
‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இன்றைக்கு அந்த அளவுக்கு நம்மிடையே குடிப் பழக்கம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டி ருக்கிறது.

தொடர்ந்து மதுப்பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய் களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.

குடிப்பழக்கத் தால் நம் வயிற்றில் அமிலம் மேலும் மேலும் அதிகரிக்கத் தான் செய்யும்.

நிலக்கடலை இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

காரமான உணவுகள்

அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உண வுகளும் அதிக மசாலா சேர்த்த உணவு களும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். 
 
எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும்.

ஏற்கெனவே அல்சர் இருப்ப வர்களின் நிலை இன்னும் மோசமாக மாறி விடும். எனவே, அதிகம் மிளகாய்த் தூள், மிளகாய் சேர்த்த உணவு களைத் தவிர்ப்பது நல்லது.
காபி 
 
நீங்கள் ஒரு காபி பிரியரா? கண்டிப் பாக நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ‘தொடர்ந்து காபி குடிப்ப தாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம்.

காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங் களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது.

வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக் கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும்.

இதில் உள்ள அதிக அளவிலான புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் செரிமான மாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கி விடும்.

இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்.
சோடா, குளிர்பானங்கள்

காபி குடிப்பவ ராய் இல்லாமல் இருந்தாலும், அதற்குப் பதிலாக வித விதமான குளிர் பானங்கள் குடிப்பவராக இருந்தாலும் அதுவும் பிரச்னையே.

சோடாவிலும் குளிர் பானங் களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியது.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

இது செரிமானத் திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர் பானங்களையோ அருந்து வதைத் தவிர்க்க வேண்டும்.

பால் அல்சர் உள்ள வர்கள் பால் மற்றும் பால் உணவு களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக் கிறார்கள்.

ஆனால், பாலில் இருக்கும் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத் தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்க்கும் போதே, எந்த உணவை யெல்லாம் அதிகமாக உட்கொள்ள லாம் என்பதையும் பார்க்க வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு !
முதலில் அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டியது அவசியம். நார்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமான த்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும்.

முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகிய வற்றை அதிகமாக உட்கொள்ள லாம். உணவில் புதினாவைச் சேர்த்துக் கொள்ள லாம்.

பருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் !

தேங்காய்ப் பால், மணத்தக்காளிக் கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிய வற்றைச் சேர்த்துக் கொள்ள லாம்.

தேவை யற்ற உணவு களைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னை யிலிருந்து மீள உதவும்.
Tags: