பெண்கள் இடுப்பு மடிப்பு நல்லதா?

Fakrudeen Ali Ahamed
2 minute read
திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
பெண்கள் இடுப்பு மடிப்பு நல்லதா?
உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்ப டுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 
 
அமெரிக்கா வின் ஒஹியோ மாநில பல்கலை க்கழக ஆராய்ச்சியாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். 
 
1986&ம் ஆண்டு முதல் 2008&ம் ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
பெண்கள் திருமணத்துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறு விறுவென அதிகமாகிறது. 
 
இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள். பெரும்பா லும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது.
பெண்கள் இடுப்பு மடிப்பு நல்லதா?
இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது. 
 
திருமணம் ஆகாதவ ர்களை விட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.
 
இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்: 
 
1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது. 
 
2. மட்டம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு களைத் தவிர்த்து விடுங்கள். 
 
3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது. 
 
4. மது, புகை கூடவே கூடாது. 
5. குளிர் பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது. 
 
6. நார்ச் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும். 
 
7. ஓட்ஸ் கஞ்சி நல்லது. 
 
8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற் பயிற்சி, 45 நிமிட நடைப் பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது. 
 
9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.
Tags: