முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !

Fakrudeen Ali Ahamed
0
அதரங்கள் பேசும் அன்பு மொழி முத்தம். ஃபிரெஞ்சுக் காரர்களை கேட்டால்... 'முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியி னருக்கு சரியாக முத்தம் கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள்.
 அன்பு மொழி முத்தம்

அதையெல்லாம், 'குட் நைட்’ பகுதியில் டாக்டர் நாராயண ரெட்டி பார்த்துக் கொள்வார். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்?

பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற முத்தங்களினால் பரவும் நோய்கள் பற்றியும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறைப் பேராசிரியர் சுந்தர மூர்த்தி விளக்கமாகப் பேசினார்.

'முத்தத்தினால் பல நன்மைகள் இருக்கின்றன. தங்களது அன்பின் ஆழத்தை இது தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிற்றின்ப நுகர்வுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஆழமாக, நிதானமாக அளிக்கப்படும் முத்தம் ஒன்றின் மூலம் 60 கலோரி வரை சக்தி எரிக்கப் படுகிறது. முத்தம் முகச்சுளிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக வாயைச் சுத்தமாக வைத்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) ஓரளவு அதிகரிக்கிறது'' என பாஸிடிவ் பாயின்ட்களை அடுக்கிய டாக்டர் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய ஏரியாக்களைப் பற்றியும் விளக்கினார்.

''நெற்றி, உச்சந்தலை, கைகள் போன்றவற்றில் கொடுக்கப்படும் முத்தங்களி னால் நோய்த்தொற்றுகள் அதிகமாகப் பரவுவது இல்லை. இவை மேலோட்டமான முத்தங்கள். 

ஆனால், உதட்டின் மீது உதட்டைப் பொருத்தி, உமிழ்நீர்கள் பரிமாற்றம் ஆகின்ற முத்தங்களின் போது கண்டிப்பாக எச்சரிக்கை தேவை.

முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !

கணவன் மனைவிக் கிடையே பரஸ்பர உமிழ்நீர்ப் பரிவர்த்தனையோடு நடக்கும் தாம்பத்தி யத்தைத் தாண்டி வேறு ஒருவருக்கு 'ஃபிரெஞ்ச் முத்தம்’ கொடுக்க எவருக்கேனும் சபலம் ஏற்பட்டால் அப்படிப் பட்டவர்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
ஒருவரின் உமிழ்நீரில் நோய்களைப் பரப்பும் நுண் உயிரிகள் ஏராளமாக இருக்கின்றன. அவை ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு போனால், சளி, ஃப்ளூ போன்றவை தொற்றிக் கொள்ளக் கூடும்.

மோனோ நியூக்ளியோஸிஸ் என்னும் நோய் உமிழ்நீரில் இருக்கும் 'ஏப்ஸ்டெயின்பார்’ வைரஸ் மற்றும் 'சைடோமெகாலோ’ வைரஸ்களால் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொண்டையில் வெண் படலம் தோன்றும்.
தசைகளில் வலி இருக்கும். பசியின்மை தோன்றும். உடலில் கொப்பளங்களும் வரலாம். கன்னங்களின் உட்புறச் சுவர்கள், நாக்கு, வாயின் மேல் அண்ணம் மற்றும் பற்கள் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

'ஸ்ட்ரெப்டோகோகஸ்’ என்னும் பாக்டீரியா ஈறு நோய்கள், தொண்டைப் பிடிப்பு உள்பட பல்வேறு நோய்களு க்குக் காரணம் ஆகிறது. மூக்கு, வாய், தொண்டை மற்றும் சுவாசப் பாதை ஆகிய அனைத்துமே தொடர்ச்சியாகவும் ஒரே விதமான திசுக்களாலும் ஆனவை.

எனவே, உமிழ்நீரில் இருக்கும் கிருமிகள் முத்தத்தின் போது பரிமாறப்பட்டு ஓரிடத்தில் ஏற்படும் தொற்று எளிதாக மற்ற இடங்களுக்கும் பரவி விடும். கல்லீரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ் வைரஸ் உமிழ்நீரில் இருக்கிறது.

முத்தமிடுவதன் மூலம் நிச்சயம் இது அடுத்த வருக்குத் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. ஹெச்ஐவியைப் பொருத்தவரை முத்தமிட்டுக் கொள்கிறவர் களின் வாயில் புண்களோ ரத்தக் கசிவோ இருந்தால் பரவ வாய்ப்பு இருக்கிறது.
வைட்டமின் சி குறைபாடு உள்ளவர் களுக்கு ஈறுகளில் கேண்டிடா என்னும் ஈஸ்ட் உயிரியால் தொற்று ஏற்படும். அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்க ளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். இதுவும் முத்தத்தின் மூலம் பரவக் கூடியதே.

அடிக்கடி வாய் உலர்ந்து போகிறவர்களின் வாயில் மற்றவர்களைவிடவும் நான்கு மடங்கு எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும்.

கிளாமிடியா, கொனேரியா போன்ற பால்வினை நோய்க் கிருமிகளும் வாய்மீது வாய் வைத்து அழுந்தக் கொடுக்கும் முத்தத்தின் மூலம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

பாலியல் தொழிலாளி களுக்கு வாயில் முத்தம் கொடுப்பதால் இந்த மாதிரி கொடிய நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவை மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக் கூடும்'' என்கிறார் சுந்தரமூர்த்தி.
உமிழ் நீருக்கு தன்னைத் தானே சுத்தப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டு. உமிழ்நீரில் இருக்கும் லைசோஸைம் போன்ற வேதிப்பொருட்க ளுக்கு, தீங்கு செய்யும் நுண் உயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. 

ஆனால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிலவற்றை இது அழிப்பதில்லை. உரிய துணை/ இணைக்கு மட்டுமே முத்தம் கொடுப்பதன் மூலமும் முத்தமிடும் முன்னும் பின்னும் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முத்தத்தி னால் வரும் நோய்களின் தொற்றை முற்றாகத் தவிர்க்கலாம்.

எனவே 'இச்’சுக்கு முழுவதுமாகத் தடா போட வேண்டிய அவசியம் இல்லை. எச்சரிக்கையோடு இருந்தால் நீங்களும் கமல் ஹாசன்தான்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)