பெண்களின் சரும முடிகளை இயற்கையான முறையில் நீக்க எளிய வழி !

Fakrudeen Ali Ahamed
0
சருமத்தின் அழகையும், ஆரோக்கிய த்தையும் பாதுகாக்க வேண்டு மானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்து வதற்கு பதிலாக, இயற்கை பொருட் களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.

சரும முடிகளை இயற்கையான முறையில் நீக்க

இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

அவற்றைப் பயன் படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவத தோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப் படுத்துங்கள்.

• சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

• 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி,

10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும். 

• மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து,

சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

பெண்களின் சரும முடிகளை நீக்க

• தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.
இந்த முறையை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)