வசம்பு கைவசம் இருந்தால் கவலை இல்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பிள்ளை வளர்ப்பான் என்று பெயர் வைத்துள்ளனர்.
குழந்தைகளின் வயிறு சம்பந்தமான உபாதைகளை தீர்க்கும் அபூர்வ மருந்து.
12 வார குழந்தைகளின் கையில் காப்பு மாதிரி கட்டி விட்டால் அதை சப்பும் போது வயிற்று பிரச்னை இருந்தால் சரியாகி விடும்.
வசம்பை சுட்டு அதன் சாம்பலுடன் தேன் கலந்து நாவில் தடவிவர நன்கு பேச்சு வரும். வசம்பு இஞ்சி வகையை சேர்ந்தது. இதன் வேர்தான் வசம்பாகும்.
பெரியவர்கள் கூட பொடி செய்து சுடுநீரில் கலந்து அருந்தி வர வயிறு உப்புசம் குறையும்.
குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பு மிக்க உண்டு போலும்.
பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து அழுவதை தாய்மார்கள் வயிற்று வலிதான் காரணம் என்கிறார்கள்.
அல்லோபதி மருந்து கொடுத்தாலும் அழுகையை நிறுத்துவதில்லை.
அல்லோபதி மருத்துவர்கள் நாட்டுமருந்தை கொடுப்பதையும் ஏற்ப்பதில்லை.
எனினும் அவர்கள் அறியாவண்ணம் வசம்பை அகல் விளக்கில் சுட்டு கரியை சந்தனகல்லில் தேனுடன் அல்லது நீருடன் தேய்த்து குழந்தையின் நாக்கில் தடவிய சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கி விடுகிறது!
குழந்தை அழுகையில் வசைம்பை தேடுவதை தவிர்க்க குழந்தையின் அரைநாண் கயிற்றில் கட்டி விடுகிறார்கள் போலும்.
சில பெண்கள் மருந்தின் பெயரை கூறினால் மருந்து வேலை செய்யாது என்ற மூடநம்பிக்கையில் வசம்பை பிள்ளை வளர்த்தி என்று கூறுகிறார்கள்.