தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கர்ப்பப்பைக்குள் கரு வளர ஆரம்பிக்கும் போது அது வளர்வதற்கு ஏதுவாக முதலில் ஒரு பை (sac) உருவாகிறது.
பனிக்குட நீர் என்பது கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் முளையத்திற்கு அல்லது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்தையும்,
பாதுகாப்பையும் வழங்குவதற் காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப் பையினுள் இருக்கும் திரவம் ஆகும்.
கருக்கட்டல் நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளின் பின்னர் உருவாகும் பனிக்குடப்பை முக்கியமாக நீரினால் நிரப்பப்படும்.
பத்து கிழமைகளில் பனிக்குட நீர், முளைய விருத்திக்குத் தேவையான காபோ ஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பு உட்பட அனைத்து ஊட்டச் சத்துக்களையும் உள்ளே கொண்டிருக்கும்.
குழந்தை சிறுநீர் கழிக்கத் தொடங்கிய பின்னர், இந்த பனிக்குட நீரில் சிறுநீரும் கலந்திருக்கும். அதற்குள் கரு வளரும் போது நஞ்சுப்பை (placenta) உருவாகிறது. அது தாயின் உடலுடனும் கருவுடனும் இணைந்திருக்கும்.கரு சிசுவாக வளரும்.
தாயின் உடலில் இருந்து இரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன், சத்துக்கள் அனைத்தும் நஞ்சுப்பை வழியாக வளரும் சிசுவிற்குப் போகும்.இதயம் முதல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய்த் தோன்றும்.
பைக்குள் வளரும் சிசு அசையவும் எந்த அதிர்ச்சிக்கு உள்ளாகாமாகவும் இருக்க பையின் உள் இருக்கும் திரவம் பயன்படும்.
சிசு வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகும். அதற்குத் தேவையான அளவிற்கு உள்ளே உள்ள திரவமும் அதிகமாகும்.
அது குறைவாக இருப்பதும் தவறு. அதிகமாக இருப்பதும் சிசுவிற்கு ஆபத்து. அவ்வப்போது மகப்பேறு மருத்துவர் ஸ்கேன் மூலம் அதைக் கண் காணித்துக் கொள்வார்.சிசு அசையும்.
அதன் கல்லீரல், மண்ணீரல் எல்லாம் வேலை செய்யத் தொடங்கி விடும். நுரையீரல் மட்டும் கடைசியில் தான் உருவாகும். நஞ்சுப்பை உதவியோடேயே சிசு அந்த வேலையைச் செய்து கொள்ளும்.
குழந்தை பிறந்த பிறகு தான் மூச்சு விடவே தொடங்கும். நுரையீரல் விரியத் தொடங்கும்.ஆக கர்ப்பப்பையில் உள்ள திரவத்தினால் ஆபத்து எதுவும் இல்லை.