தனிமைப்படுத்துதல் மன ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க !

Fakrudeen Ali Ahamed
0
COVID-19 தொற்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. இன்னமும் இந்த நோய் நம்மை விட்டு போனதாக தெரியவில்லை. 
தனிமைப்படுத்துதல் மன ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க
நிறைய வீடுகளில் நிறைய மனிதர்களில் இந்த கொரோனா தனிமைப்படுத்துதல் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். 

கொரோனா பீதிக்கு நடுவில் மக்கள் பலர் மன அழுத்தம், பதட்டம், பயம் ஒரு பக்கம் என்று மனநல பிரச்சனைகளால் பாதிப்படைந்து வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தனிமைப்படுத்துதல், சமூக விலகல், வெளியே வரக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் நம்முடைய மன ஆரோக்கியத்தில் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது என்றே கூறலாம். 

எனவே மனரீதியாக உங்களை ரிலாக்ஸ் ஆக வைக்க என்ன செய்ய வேண்டும்? தேவையில்லாமல் பீதி அடைவதை தடுப்பது எப்படி இது போன்ற உங்க கேள்விகளுக்கு பதில் இதோ.

உங்க பிரச்சனைகளை வெளிப்படுத்தி விடுங்கள்
உங்க பிரச்சனைகளை வெளிப்படுத்தி விடுங்கள்
இதுவரை வெளி உலகத்தில் சுற்றி வந்த நாம் தற்போது வெற்றுச் சுவரை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் உணர்ச்சி ரீதியாக நீங்கள் வெறுமையை உணர நேரிடலாம். 

இதை தவிர்க்க முற்படுங்கள். உங்க உணர்வுகளுக்கு குரல் கொடுங்கள். உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களை பற்றி பேசுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். 
இது கொரோனா பயத்தின் மத்தியில் கூட உங்களுக்கு ஒரு நல்ல மனநிலையை கொடுக்கும்.

நீங்கள் சரியாக சாப்பிடுங்கள்
நீங்கள் சரியாக சாப்பிடுங்கள்
மன ஆரோக்கியத்திற்கும் நம் உணவுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது. எனவே காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்க உணவு ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொண்டு வந்தால் உங்க மன ஆரோக்கியமும் மேம்படும். எனவே சரியான நேரத்தில் அளவான ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வாழுங்கள்.

உங்க எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள்
உங்க எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பதை விட உங்களுக்கு உங்களிடம் என்ன தேவை என்பதை யோசியுங்கள். அதற்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். 
நீங்கள் உங்களை அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களில் ஆற்றலை செலுத்துங்கள். இது உங்களுக்கு ஒரு நேர்மறை சக்தியை கொடுக்கும்.

தொடர்பில் இருங்கள்
தொடர்பில் இருங்கள்
மன ஆரோக்கியமாக இருக்க நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க முற்படுங்கள். நண்பர்கள், உறவினர்க ளிடமிருந்து நீங்கள் விலகி இருந்தால் கூட அவர்களின் உரைகள், 

வீடியோ அழைப்பிற்கு பதில் அளியுங்கள். இது உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல மன ஆரோக்கியத்தை கொடுக்கும்.

தயங்காமல் உதவி கேளுங்கள்
தயங்காமல் உதவி கேளுங்கள்
சில நேரங்களில் நீங்கள் பலவீனமாக உணரும் போது மற்றவர்களிடம் தயங்காமல் உதவி கேளுங்கள். உங்க மனதை லேசாக்க நண்பர்களிடம் பேசலாம், ஒரு மன நல ஆலோசகரிடம் செல்லலாம். 

இது உங்களுக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அமைதியாக இருங்கள் அமைதியாக இருங்கள். எல்லா நேரங்களும் நமக்கு ஒரே மாதிரியாக இருக்காது. சில நேரங்களில் நீங்கள் நன்றாக உணராமல் இருக்க நேரிடலாம். 
இதற்கு என்ன காரணம் என்று அறிவது முக்கியம். அதை புரிந்து கொள்வது அவசியம். தினசரி சில நேரங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அது குறித்து வருத்தப்படாதீர்கள். 

உங்களின் கட்டிப்பாட்டில் இல்லாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது என்பதை உணருங்கள்.

உங்களுக்கு என்று சில நேரத்தை செலவிடுங்கள்
உங்களுக்கு என்று சில நேரத்தை செலவிடுங்கள்
மற்றவர்களுக்காக நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் கூட உங்களுக்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். 
அது உங்களுக்கு பிடித்த புத்தகத்தை படிப்பதாகவோ அல்லது விருப்பமான திரைப்படமாகவோ இருக்கலாம். இது உங்க மனதை உற்சாகப்படுத்தி மறுபடியும் குஷிப்படுத்த உதவி செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)