வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !

Fakrudeen Ali Ahamed
0
முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் நுழை வாயிலில் படிகாரத்தை கட்டி தொங்க விட்டு இருப்பார்கள். 
வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா?
சில பேர் இந்த படிகாரத்தை கொண்டு ஷேவிங் செய்த பிறகு சருமம் ஈரப்பதத்துடன் இருக்க பயன்படுத்துவது உண்டு. இது மலிவாக கிடைக்கக் கூடிய ஒன்றும் கூட. 

அது மட்டுமல்லாமல் இயற்கையானது என்பதால் நம் சருமத்திற்கு நல்லது. இந்த படிகாரத்தை கொண்டு நாம் நிறைய நன்மைகளை பெற முடியும். 
மேலும் நாம் ஷேவிங் செய்யும் போது ரேஸரால் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால் கூட அதை ஆற்ற இது உதவுகிறது. இதன் ஆன்டி செப்டிக் பண்புகள் தோல் தொற்றை தடுக்கிறது. 

இந்த பளபளப்பான கல்லைக் கொண்டு பற்களின் மஞ்சள் கறை யிலிருந்து சரும நோய்கள் வரை சரிசெய்ய முடியும். சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்ற வற்றைக் கூட நீக்க முடியும்.

பற்கள் மஞ்சள் கறையை போக்க...
பற்கள் மஞ்சள் கறையை போக்க
* படிகாரம் உங்க பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க பயன்படுகிறது. சிறிது படிகாரத்தை தண்ணீரில் போட்டு அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். 

* இதைத் தவறாமல் நீங்கள் செய்து வந்தால் உங்க பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி விடும். 
* அப்படி இல்லை யென்றால் தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாயை கொப்பளியுங்கள்.

துர்நாற்றமிக்க பாதம் நீங்க...
துர்நாற்றமிக்க பாதம் நீங்க
சிலருக்கு சுத்தமான சாக்ஸ் அணிந்திருந்தால் கூட நாள் முழுவதும் பாதங்களில் துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது. 

எனவே பாதங்களில் உள்ள துர்நாற்றத்தை நீங்கள் போக்க நினைத்தால் படிகார தண்ணீரில் கால்களைக் கழுவுங்கள். 

* ஒரு பக்கெட்டில் கொஞ்சம் படிகாரத்தை போடுங்கள். 

* படிகாரம் கரைந்த உடன் 15 நிமிடங்கள் கால்களை அதில் ஊற வையுங்கள். 

* இதைச் செய்து கொண்டே வந்தால் சீக்கிரமே துர்நாற்றத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

காயத்திற்கு பிறகு தொற்று உண்டாதல்
காயத்திற்கு பிறகு தொற்று உண்டாதல்
* ஷேவிங் செய்த பிறகு சருமத்தில் ஏற்படும் தொற்றால் காயங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த காயத்தை நீங்கள் போக்க படிகாரத்தை கொண்டு சரி செய்யலாம். 

* காயம் ஏற்பட்ட கால்களை படிகார நீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். 
* காயம் காரணமாக உங்களுக்கு இரத்த போக்கு ஏற்பட்டால் அதில் படிகாரத்தை அரைத்து தடவுங்கள். இதைச் செய்து வந்தால் இரத்தப் போக்கு நின்று விடும். வலியும் குறைந்து விடும்.

சுருக்கம் குறைந்து போதல்
சுருக்கம் குறைந்து போதல்
சிலருக்கு சீக்கிரமே முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்து விடும். சரும சுருக்கங்களை போக்க ஏராளமான க்ரீம்களையும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். 

படிகார நீர் உங்களுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்று. இந்த நீரை முகத்தில் லேசாக தடவினால் சரும சுருக்கங்கள் மறைய வாய்ப்புள்ளது. கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க கூட இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

வியர்வை கட்டுப்பாடு
வியர்வை கட்டுப்பாடு
சிலருக்கு வியர்வை துர்நாற்றம் என்பது பெரிய தொந்தரவாக இருக்கும். எனவே வியர்வை துர்நாற்றத்தை போக்க படிகார தூளை நீங்கள் பயன்படுத்தலாம். 
இதற்கு உங்க குளியல் நீரில் சிறிது படிகார தூளை சேர்த்து குளித்து வாருங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்க உடல் துர்நாற்றம் நீங்கி விடும். வியர்வை வாசனை போய் விடும்.

இருமல் பிரச்சனை நீங்க
இருமல் பிரச்சனை நீங்க
நீங்க நாள்பட்ட ஆஸ்துமா, இருமல் பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் படிகாரம் உங்களுக்கு நன்மை அளிக்கும். 

அதற்கு நீங்கள் தேனில் படிகாரத்தை கலந்து சாப்பிடுங்கள். இதைச் செய்வதன் மூலம் இருமலில் இருந்து நிவாரணம் பெற முடியும். உங்க உடல்நிலையும் மோசமடையாது.

பேன்களை கொல்ல உதவும்
பேன்களை கொல்ல உதவும்
உங்களுக்கு அடிக்கடி பேன் தொல்லை பிரச்சனைகள் ஏற்பட்டால் அதைப் போக்க படிகாரத்தை கொண்டு முடியை அலசுங்கள். 
படிகாரத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பேன்களைக் கொல்லுவதோடு, அழுக்குகளை அகற்றவும் உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)