திருமணம் முடிக்கப் போகும், கருத்தரிக்கும் பெண்களுக்கு !

Fakrudeen Ali Ahamed
0
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை
 கருத்தரிக்கும் பெண்களுக்கு

மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லதுஅங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம் . இதைத் தடுப்பது மிகவும் இலகு .

கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது.
கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் துண்டு இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் கம்மி. 

கருத்தரித்த பின் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு இந்த மாத்திரை உட்கொள்ளப்பட வேண்டும்.கருத்தரித்து மூன்று மாதத்திற்கு பின் இந்த மாத்திரையை எடுக்க வேண்டியதில்லை.

ஆகவே திருமணம் முடிக்கப்போகும் பெண்களே திருமணம் முடித்தவுடன் குழந்தைக்காக முயற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பே போலிக் அசிட் மாத்திரையை பாவியுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)