வயதான பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறையுமா?

Fakrudeen Ali Ahamed
0
தாம்பத்திய உறவு என்பது இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த வரம். தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் மனிதன் உடல் அளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சி பெறுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றது. 
பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறையுமா?

மேலும், ஆணும் பெண்ணும் சம அளவில் உறவில் ஈடுபட்டால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும். ஆனால், வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. 

மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதம் மாதம் வரக்கூடிய பிரச்சனைகளில் ஓன்று. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது உடளவிலும், மனதளவிலும் பெண்கள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். 
இந்த ஆய்வில் மாதவிலக்கு அடைந்த 4,500 பெண்களுடன் உரையாடல் நடத்திய போது இறுதியாக நீங்கள் எப்போது உறவில் ஈடுபட்டிர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஞபாகமே இல்லை என பதில் கூறியுள்ளனர். 

ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மாதவிலக்கு நின்ற பிறகு உறவில் திருப்தியுடன் ஈடுபட முடிய வில்லை என்று கருத்து தெரிவித் துள்ளனர். 

அப்படி ஈடுபட்டாலும் பெண்களின் வெஜினா வறண்டு போவதால் அதிக வலியை ஏற்படுத்து கிறது எனவும் தெரிவித்துள்ளனர். 
இறுதியாக இப்படி பல்வேறு காரணங்கள், பிரச்னைகளால் தான் மாதவிடாய் விலக்கிற்குப் பின் பெண்களால் உறவில் திருப்தியாகவோ அல்லது முற்றிலு மாகவோ ஈடுபட முடியாமல் போகிறது என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)