விரைப்பு இல்லாமலும், விந்தை வெளியேற்ற இயலாமலும் இருந்தால் ஆண்மைக் குறைபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதில், ‘ஆர்கானிக் இம்பொடன்ஸ்’, ‘சைக்காலஜி இம்பொடன்ஸ்’ என்று இரு வகைகள் உள்ளன.
ஆர்கானிக் இம்பொடன்ஸ் என்ற ஆண்மைக் குறைபாட்டில், ஹார்மோன் தூண்டுத லுக்கு ஏற்ப உடல் ஒத்துழைக் காது.
நரம்புப் பாதைகள் முழுமை அடையாமலும் அல்லது இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிகள் போதுமான அளவு வளர்ந்தி ராமலும் இருக்கும்.
சிலர், இளம் வயதி லிருந்தே ஆண்மைக் குறை பாட்டுடன் இருப்பார்கள். வேறு சிலர், பிற்காலத்தில் அறுவைச் சிகிச்சை,
காயங்கள் அல்லது நோய்களின் விளைவாக ஆண்மைக் குறைபாடு என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
உடல் ரீதியான காரணங் களால் ஆண்மைக் குறைபாடு வந்த போதிலும்,
அவை உள்ளத்தை யும் பாதித்து ஆண்மைக் குறைபாட்டின் அளவையும் அதிகரித்து விடும்.
ப்ராஸ்டேட் பிரச்னைகள்,
சர்க்கரை நோய்
சிறுநீரகச் செயலிழப்பு,
முதுகுத் தண்டுவட காயங்கள்,
நரம்புப் பிரச்னைகள்,
இடுப்புப் பகுதியில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள்,
சிறுநீரகம் மற்றும் ப்ராஸ்டேட் போன்ற அறுவைச் சிகிச்சை யின் விளைவுகள்,
ஹார்மோன் சீரின்மை, டெஸ்டோஸ்டீரான் குறைதல்
ரத்தக் கொதிப்பு க்காகச் சாப்பிடும் மாத்திரைகள்,
மது, போதை மருந்துகள் மற்றும் புகைப்பழக்கம் போன்றவை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கு கின்றன.
உடல் அளவில் பாதிப்பால், ஆண்மைக் குறைபாடு என்ற நிலைக்கு ஆளானவ ர்களின் தூக்கத்தின் போது
சிறிதளவு விரைப்புத் தன்மை ஏற்படுவது உண்டு. இதைப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
படுக்கப் போகும் முன், ஒரு சிறிய ஸ்ட்ரிப் ஒன்றை எடுத்து நீரில் நனைத்து ஆண் உறுப்பின் மையப் பகுதியில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
விடிந்து எழுந்து பார்க்கும் போது, ஸ்ட்ரிப் விலகி இருந்தால் உறக்கத்தின் போது விரைப்பு வந்திருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பரிசோதனையைப் பல இரவுகள் செய்து பார்க்க வேண்டும்.
ஹார்மோன் பற்றாக்குறை அல்லது நோய்களின் காரணமாக ஆண்மைக் குறைபாடு வந்திருந்தால்,
டெஸ்டோஸ்டீரான் கொடுத்து அதைச் சீரமைக்க லாம் அல்லது அறுவைச் சிகிச்சை மூலம்,
ஆண் உறுப்பில் ‘பீனைல் இம்ப்ளாண்ட்’ என்ற பதியம் செய்து விரைப்பை உண்டாக்க லாம்.
சர்க்கரை நோயாளிகள், முதுகுத் தண்டு வடப் பாதிப்பு உள்ளவர்கள், இடுப்புப் பகுதியில் முறிவு ஏற்பட்ட வர்கள்,
நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், விபத்தால் ஆண் உறுப்பு பாதிக்கப் பட்டவர்கள், பீனைல் இம்ப்ளாண்ட் கருவியைப் பதியம் செய்து கொள்ளலாம்.
மருந்து, மாத்திரைகள் மற்றும் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்து கொண்டவர் களின்
உடலில் உயிரணுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகும் என்பதால், கருவாக்கம் செய்து கொள்ள இயலும்.
சிகிச்சைக்கு செல்ல முடிவு எடுக்கும் முன், மருத்து வரை அணுகி இந்த விவரங் களைத் தெரிந்து கொள்வது நல்லது.
– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்