நமது உடலில் உப்புச் சத்து கூடி விட்டதா? - சோளம் சாப்பிடுங்கள் !

Fakrudeen Ali Ahamed
எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ள சோளம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. 
சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (Genus) ஆகும்.

இவற்றுள் சில தானியங் களுக்காக வும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக் காகவும் பயிரிடப் படுகின்றன.

சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்று நோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கி யுள்ளது.

சோள மாவில் இதயத்தை ஆரோக்கிய மாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம்,

நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்ட மினும் உள்ளன.

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்த சோகை சர்க்கரை நோய் முதலிய வற்றைக் குணப் படுத்துகிறது.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
எனினும் மூல நோயாளிகள் சோள உணவை தவிர்ப்பது நலம்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம்,

அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Tags: