புகைப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

Fakrudeen Ali Ahamed
பல பேர் புகைப் பழக்கத்தை நிறுத்த விரும்பு கின்றனர். ஆனால் நிகோடினின் போதைப் பண்பின் காரணமாக இப்பழக்கத்தை விடுவது கடினமாக உள்ளது. 
உண்மை யில் புகைப் பழக்கத்தை வெற்றிகர மாக விட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சியை மேற்கொண்டி ருந்தனர். 

புகைப் பழக்கத்தை விட்டு விட கீழே கொடுக்கப் பட்டுள்ள ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.

வீட்டுப் பணிகளைச் செய்தல்

புற்று நோய்க் கழகம், உங்கள் மருத்துவர், இணையதளம், நூலகம் போன்ற வற்றில் கிடைக்கும் சுய உதவித் தகவல்களைப் பெற வேண்டும். 

புகைப்பதை நிறுத்துவ தற்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். 

புகைப் பழக்கத்தைக் கை விட்டர்வர் களிடம் பேச வேண்டும். அவர்கள் எப்படிக் கை விட்டனர் என்பதையும், 

அவர்களுக்கு உதவியவை எவை என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறிய மாற்றங் களை ஏற்படுத்தல்

கண்ட இடத்தில் புகைப்பதை விட்டு விட்டு புகைக்கும் இடங்களைக் குறைத்து கொள்ளுங்கள். 

நீங்கள் உங்கள் வீட்டிலோ வெளியிலோ ஒரே அறையை மட்டும் புகைப்பதற் கென்று தீர்மானித்து வைத்து கொள்ளுங்கள். 
காரில் செல்லும் போது புகை பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். 

சிகிரெட்டை மொத்தமாக வாங்குவதை விடச் சில்லறை யாக வாங்குங்கள். 

குறைவான திருப்தி தரும் சிகிரெட் வகைக்கு மாறுங்கள்.

புகைப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்

புகைத்தலை நிறுத்த வேண்டும் எனத் நீங்கள் நினைத்தால் உங்கள் நடத்தையைக் கவனிக்கவும். 

எப்போது எங்கே புகைக்கிறீர்கள், யாருடன் சேர்ந்து புகைக்கி றீர்கள் என்று புகைப்ப தற்கான காரணங்களைப் வரிசைப் படுத்துங்கள். 

அவற்றை எதிர்கொள்ளும் திட்டங் களை வகுத்துக் கொள்ளுங்கள். 

இத்தகு சூழல்களைப் புகை பிடிக்கா மலேயே எதிர் கொள்கின்ற திறனைப் பயிற்சியி னால் பெறலாம்.

உதவி தேடல்
இது சம்மந்தமாக நடைபெறும் முகாம்களில் பங்கு கொள்ளுங்கள். 

அதிக அளவில் உதவியைப் பெற்றால் பழக்கத்தி லிருந்து மீள்கின்ற வாய்ப்பு அதிகம். 
ஆய்வின் படி சுயமாக மீளவேண்டும் என்று முயல்வோரை விட இத்தகைய நிகழ்ச்சிகளில் 8 முறை பங்கு கொண்டவர்கள் தங்கள் பழக்கத்தை நிறுத்தி யுள்ளனர்.

முனைப்புடன் இருத்தல்

வாக்குறுதி தருதல், புகைப் பழக்கத்தை நிறுத்துவ தற்கான ஒரு சிறப்பு முயற்சியாகும். 

ஒரு மருத்துவ மனை தனக்கு சொந்தமான முகாம்களைக் கொண்டு செய்த ஆய்வுப்படி புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று 

குறைந்த அளவில் முனைப்புக் கொண்டவர் களை விட அதிக முனைப்புடை யவர்கள் இருமடங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
எந்த நாளில் நிறுத்த வேண்டும், நிறுத்தும் நாளைத் தீர்மானித்தல்

அதிகச் சிரமமில்லாத முறையில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தீர்மானிக்க வேண்டும். 

உங்கள் நோக்கங்களை நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், தன்னுடைய மனைவி ஆகியோரிடம் தெரிவிக்கவும். 

உங்கள் முயற்சிக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
Tags: