அடிக்கடி தூக்கம் வந்தால்? எச்சரிக்கை !

Fakrudeen Ali Ahamed
2 minute read
மனிதனுக்கு உணவு , நீர், காற்று ஆகியவை எப்படி இன்றியமை யாததோ அது போல் தூக்கமும் முக்கியமான ஒன்று. 

எந்நேரமும் ஓய்வில் லாமல் உழைப்பவர் களுக்கு தூக்கம் என்பது ஒரு வரப்பிரசாதம்.

இந்த நவீன காலத்தில் தூங்காமல் எப்போதும் வேலையே கதி என்று இருப்பவர் களுக்கு ஏராளமான நோய்கள் வரும் என்பது நம் அனைவரு க்கு தெரியும்.

ஆனால் எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பதும் ஒரு நோய் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நீங்கள் வேலை செய்யும்போது இடையே அடிகடி தூக்கம் வருகிறதா! 

அப்படி என்றால் அது நார்கோ லெப்ஸியின் அறிகுறியாக இருக்கலாம். நார்கோ லெப்ஸி (Narcolepsy) என்றால் என்ன?

ஒரு மனிதன் தேவைக்கு அதிகமாக (அதாவது திடீர் திடீரென ) தூங்குவதை தான் நார்கோ லெப்ஸி என அழைக் கின்றனர். அறிகுறிகள்

10 முதல் 25 வயது வயதுக்குட்பட்ட காலங்களில் இதன் அறிகுறிகள் காணப்படும், 

முதல் 5 வருடங் களுக்கு மோசமாக இருக்கும் இந்த வியாதி, பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர ஆரம்பிக்கும்.

நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டு இருப்பீர்கள் திடீரென அப்படியே தூங்கி விடுவீர்கள் . 

இந்த தூக்கம் சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை கூட நீளும்.

உங்கள் உடல் அதன் உணர்வை இழக்கும். இந்த நிலையை கேட்டப்ளெக்ஸி என கூறுகின்றனர். 

அதாவது அதீத மகிழ்ச்சி, துக்கம் அல்லது கோபம் ஆகியவை நிகழும் போது உங்கள் உடல் தானாகவே அதன் உணர்வை இழக்கும்.

இதற்கு கேட்டப்ளெக்ஸி (Cataplexy ) என்று பெயர், உங்களில் நிலை அறிந்தாலும், செயல்பட முடியாது. 

நீங்கள் தூக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஸ்லீப் பராலிசிஸ் (Sleep paralysis) தூங்க ஆரம்பிக்கும் போதே கை, கால்களை நகர்த்த முடியாமை. 

ஆனால், இவர்களு க்கும் தன்னைச் சுற்றிலும் நடக்கிற விடயங்கள் எல்லாம் தெரியும்.

ஹிப்னாகோகிக் ஹாலுசினேஷன் (Hypnagogic hallucinations ) தூங்க ஆரம்பிக்கும் போது, 

கண் முன்னே யாரோ நடமாடுவது போலவும், ஏதோ சம்பவங்கள் நடப்பது போலவும் உணர்வார்கள்.

பொதுவாக நம் தூக்கம் இரண்டு நிலைகளை கொண்டது. 

அதாவது நாம் தூங்க ஆரம்பித்த சில நேரங்கள் நம் மூளை மெதுவாக வேலை செய்யும் (non-rapid eye movement).

பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அதன் செயல்பாடு அதிகரிக்கும் நாம் கனவு காண்பது கூட இந்த நிலையில் தான் (rapid eye movement). 

ஆனால் நார்கோ லெப்ஸியால் பாதிக்கப் பட்டவர்கள் முதல் நிலையான தூக்கத்தை சந்திக்காமல் நேரடியாக இரண்டாம் நிலைக்கு சென்று விடுவார்கள்.

இது உங்கள் மூலையின் செயல்பாட்டை குறைய செய்யும்.

சிகிச்சைகள்

பொதுவாக இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுக்குள் வைக்கலாம்.

மருந்துகளின் மூலமும், பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த நோயை ஒரு அளவுக்கு கட்டுப் படுத்தலாம்.
பொதுவாக மருந்துகள் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவதே நார்கோ லெப்ஸி நோய்க்கான முக்கிய சிகிச்சை யாகும்.

மேலும் மொடபினில் (modafinil) அல்லது அர்மொடபினில் (armodafinil) என்ற சிகிச்சை இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களு க்கு மேற்கொள்ளப் படுகிறது.

சில சமயங்களில் மொடபினில் மேற்கொள்வ தால் தலைவலி, வாந்தி போன்ற பக்க வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிலருக்கு மெத்தில் பினிடேட் (methylphenidate) போன்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 

ஆனால் இது நரம்பு தளர்ச்சி, இதயக் கோளாறு போன்ற கடுமையான விளைவு களை ஏற்படுத்தும்.

அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், உடற் பயிற்சி ஆகியவை களை தவிர்க்க வேண்டும்.

மேலும் காபி, நிக்கோட்டின் போன்ற வற்றை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

இதன் மூலமாக இந்த நோயை நாம் ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.
Tags: