இடுப்பில் பர்ஸ் வைத்தால் என்ன ஆகும்? - இடுப்பு வலி வரும் உஷார் !

Fakrudeen Ali Ahamed
நான் எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் தான் பர்ஸை வைப்பேன். இது தவறு என்கிறான் என் நண்பன். 

அப்படித் தொடர்ந்து வைக்கும் போது நாளடைவில் ‘சியாட்டிகா’ எனும் இடுப்பு வலி, கால் வலி என்று

பல தொல்லைகள் வரும் என்று ஒரு மருத்துவப் பத்திரிகை யில் படித்ததாகச் சொல்கிறான். இது உண்மையா?

இது உண்மை தான்.

நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள் வலிகளுக் காகச் சிகிச்சை பெறும் பிரச்சினை களில் கீழ் முதுகு வலி (Low Back Pain) இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 

முன்பு இது முதியோர் பிரச்சினை யாக இருந்தது. இப்போது இது இளைஞர் களுக்கும் வருகிறது. 

இது தனிப்பட்ட ஒரு நோயல்ல; இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு.

பணி நிமித்த மாகத் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு உட்கார்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் உட்காருவது, 

தொடர்ச்சி யாகக் கணினி திரை முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், 

தினமும் இருசக்கர வாகனங் களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள 

சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, 

கால்சியம், வைட்டமின் டி ஊட்டச் சத்துக் குறைவு, உயரமான இடத்தி லிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, 

உடல் பருமன் போன்ற காரணங் களால் முதுகெலும்பு ஜவ்வில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

இந்த வலியை சியாட்டிகா என்பர்.

பெரும்பாலோர் இதை வாய்வு வலி என்று தீர்மானித்துச் சிகிச்சை எடுக்காமல் இருப்பார்கள். 

திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமை யாகித் தொடைக்குப் பின் புறத்திலோ காலுக்கோ, மின்சாரம் பாய்வதைப் போல் ‘சுரீர்’ என்று பரவும். 

படுத்து உறங்கும் போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும் போது வலி அதிகமாகும். 

காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப் போன உணர்வும் ஏற்படும். 

முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் ஏற்படும். பலமாகத் தும்மினாலோ முக்கினாலோ வலி கடுமை யாகும்.

இடுப்பில் பர்ஸ் வைத்தால்?

இன்றைக்கு ஆண்களில் பலரும் பர்ஸை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். 

பாக்கெட் உள்ள இடுப்புப் பகுதி வழியாகத் தான், சியாட்டிகா நரம்பு காலுக்குச் செல்கிறது. 

கனமான பர்ஸை மட்டுமல்ல, ஸ்மார்ட் போன் போன்ற கனமான செல்போனை யும் 

இடுப்பில் வைத்துக் கொண்டு தொடர்ந்து பல மணி நேரத்துக்கு உட்கார்ந்தே வேலை செய்யும் போதும், 

வாகனங்களில் உட்கார்ந்து பயணிக்கும் போதும், இவற்றின் பளுவானது சியாட்டிகா நரம்பை அழுத்துவ தால், 

இடுப்பு வலியும் கால் வலியும் வருவது உறுதி செய்யப் பட்டுள்ளது.

அண்மையில் ஒரு மருத்துவரு க்கே இந்த நிலைமை ஏற்பட்டது. அவர் தன் இருப்பிடத்தில் உட்கார்ந்து 

நோயாளி களைப் பரிசோதிக்கத் தொடங்கியதும் வலது இடுப்பிலும் வலது காலிலும் வலி ஏற்பட்டது. 

முதலில் அவருடைய வலிக்குக் காரணம் சரியாகத் தெரிய வில்லை. 

பல பரிசோதனைகள் செய்தும் அனைத்தின் முடிவும் ‘நார்மல்’ என்று தான் வந்தன. 

பல மாதங்களாக அவருக்குத் தரப்பட்ட பல்வேறு சிகிச்சை களுக்கும் பெரிதாக எந்தப் பலனும் இல்லை.

இறுதியில், அவர் எப்போதும் வலது இடுப்பில் பாதுகாக்கும் கனமான பர்ஸை எடுத்து முன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டதும், 

அடுத்த சில மாதங்களில் அவருடைய இடுப்பு வலியும் கால் வலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன
Tags: