முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் முதன்மை யான காரணங்கள் இரண்டு மட்டுமே.
ஒன்று, ஜவ்வு விலகுவது (Disc prolapse); மற்றொன்று, முள்ளெலும்பு களின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது.
இந்தக் காரணங் களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகி விடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப் படுகிறது.
இதைச் சுற்றி யுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது.
பொதுவாக, இடுப்பி லிருந்து காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும்.
இதனால் தான் இந்த வலிக்கு ‘சியாட்டிகா’ (Sciatica) என்று பெயர் வந்தது.