பெண்களுக்கு உடற்பயிற்சியால் ஏற்படும் தடை !

Fakrudeen Ali Ahamed
0
கிராமங்களில் வசிக்கும் பெண்களை விட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர் களை வைத்துக் கொள்கிறார்கள். 
உடற்பயிற்சியால் தடை

நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவ தில்லை. முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காத போது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருத முடியாது. 

இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கை யிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன வென்றால், ஆண்களை விட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. 
செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ள தாகவும், சுறுசுறுப்பாக இருப்பதா கவும் இந்த அறிக்கை கூறுகிறது. 

அதிகம் செயல்படாதவ ர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற் கான சாத்தியங்களும் அதிகமாவ தாக இந்த அறிக்கை கூறுகிறது. 

அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படு பவர்களின் மூளையின் ஸ்திரத் தன்மையும் பாதிக்கப் படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 
நீரிழிவு நோய்

இந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல் படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல் படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது.

உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். 

உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்ற வற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.
வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்த பட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல் பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். 

ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும் போது, இவை மூன்றும் நடைபெறும். 
இதயத் துடிப்பு அதிகரிக்கிறது

ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல் பாட்டிற்கான பலன்களை கொடுத்து விடாது. 

முழு உடலும் செயல்படும் போது தான், உடல் ஆரோக்கிய மாக இருக்கும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே செயல் படுகிறார்கள். 

இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப் பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக் கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு.
வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப் படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப் படுகிறது. 

இதைத் தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற் பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்து வதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)