குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் !

Fakrudeen Ali Ahamed
0
தற்போதைய வாழ்க்கை முறையில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத குடும்பமே இல்லை. இன்றைய தலைமுறை குழந்தைகள் அனைத்தும் செல்போன் களுக்கு அடிமையாக உள்ளனர். 
குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற் காகவே குழந்தைக ளுக்கு செல்போன் கொடுக்கின்றனர். குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்ப்பதால், பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகள் பேசுவதற்கு ரொம்ப தாமதம் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலில் வீடியோ பார்ப்பது தான். குழந்தைகள் வீடியோ பார்ப்பதால், கற்றல் திறனும் குறைகிறது. 

குழந்தைகள் நீண்டநேரம் வீடியோவில் நேரத்தை செலவிடுவ தால் வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் சரியாக பழக மாட்டார்கள். எப்பொழுதுமே குனிந்துகொண்டு வீடியோ பார்ப்பதால் விரைவில் கழுத்துவலி ஏற்படும். 

குழந்தை வயதிலேயே வீடியோ பார்ப்பதால், வயதானபிறகு தண்டுவடம் பாதிக்கப்படும். குழந்தைகள் வீடியோ பார்ப்பதை ஆரம்பத்திலே தடுத்து விட்டால் மேற்கொண்ட பிரச்சனை களில் இருந்து குழந்தைகளை தவிர்க்கலாம். 
ஆரம்பத்திலே குழந்தைகளிடம் நீண்ட நேரம் செலவிடுங்கள். தங்களின் சுயநலத்திற் காக குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து விட்டு அவர்களின் எதிர் காலத்தை வீணாக்காதீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)