கண்ணாடி
அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற் காக அதை அணிந்திருக் கிறார்
என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். கண்ணாடி அணிவதால் சிலரது வெளித்
தோற்றத்திலும், அழகிலும் மாற்றம் ஏற்படும்.
கண்ணாடி அணிவதை
சிலர் அசவுகரிய மாகவும் கருதுவார்கள். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும்
வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல் பகுதியிலும், முகத்திலும் தழும்பும்
உருவாகலாம்.
சிலர்
முக்கியமான வேலைக்கு செல்லும் போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்து
விட்டு சென்று, அவஸ்தை படுவதும் உண்டு. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை
மற்றவர்களால் எளிதாக கண்டறிய முடியாது.
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கண்ணாடி அணிய வேண்டிய தில்லை. கொடாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம்.
ஒருவர்,
மிக அதிகமான `பவர்' கொண்ட கண்ணாடி அணியும் போது கண்ணாடி மிக தடினமாகவும்,
பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை
துல்லியமாகும்.