கான்டாக்ட் லென்ஸ் என்றால் என்ன?

Fakrudeen Ali Ahamed
0
பார்வை குறை பாட்டிற்காக கண்ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண்ணின் மேல்புறத்தில் பொருத்தப்படும் ஒரு மெல்லிய சாதனம் `கான்டாக்ட் லென்ஸ்' எனப்படுகி றது. 
கான்டாக்ட் லென்ஸ்

இந்த கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர் களை' பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும்.

கான்டாக்ட் லென்சில் எத்தனை வகைகள் உள்ளன?

கான்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக் காக நாம் உபயோகப் படுத்தலாம். பார்வைக்காக பயன் படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன.

அவை Rigid, semi soft, soft எனப்படும். ஒவ்வொரு வகை கான்டாக்ட் லென்சும், வெவ்வேறு வகை பாலிமரில் தயாரிக்கப் படுகிறது.

காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் என்பது என்ன?

கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்.

காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.

கான்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்க லாம்?

பொதுவாக கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்கலாம்.

தற்போதைய புதிய வரவான `Extended wear' என்ற கான்டாக்ட் லென்சை 14 முதல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத்திக் கொள்ளலாம்.

தற்போது தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய `Daily disposable' லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கானவைகளும், ஒரு மாதம் மட்டும் பயன்படுத்த க்கூடியவைகளும் உள்ளன.

கான்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண்டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்து கொண்டு கண்களை கசக்கக்கூடாது.
பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்க வேண்டும். இதனை அணிந்து கொண்டே தூங்கக் கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிது.

கான்டாக்ட் லென்ஸ்களால் பக்க விளைவுகள்?

அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக் கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லை.

கான்டாக்ட் லென்ஸ் எந்த வயதில் இருந்து அணியலாம்?

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பிய வர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)