குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
0
குழந்தைகளைத் தூங்க வைப்பது தான் அம்மாக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கும். இரவு முழுவதும் முழித்துக் கொண்டு அம்மாவைத் தொந்தரவு செய்யும் குழந்தைகளும் உள்ளார்கள்.
குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?
அவர்களைத் தூங்க வைத்துப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதிலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் என்றால் இன்னும் சிரமம். 
 
இரவு முழுவதும் குழந்தைகளுடன் போராடி அவர்களைத் தூங்க வைத்து விட்டுப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் விடிந்து விடும். 
 
எனவே, குழந்தைகளைத் தூங்க வைத்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தூக்கத்தை மேற்கொள்கிறார்களா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சில வீட்டில் குழந்தைகள் இரவில் தூங்காமல் பகலில் தூங்கும் .இதனால் பெற்றோரின் வேலையும் கெடும் ,உடலும்  கெடும் .அவர்கள் குழந்தையை தூங்க வைக்க படாத பாடு படுவார்கள் .
 
அதனால் குழந்தையை எளிதில் தூங்க வைத்து, நீங்களும் நிம்மதியாக உங்கள் வேலையை கவனிக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளோம் .
 
குழந்தையை தூங்க வைக்க சில டிப்ஸ்:
குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?
இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும். தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். 
 
அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம். வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது. 
 
குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ - இந்தியாவில் எங்கே தெரியுமா?
சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும். மெதுவாக குழந்தையை வருடி விட்டாலும் குழந்தை தூங்கும். குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம். 
 
ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும். ஆரோக்கியமான தூக்கத்திற்கு முதலில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்க வேண்டும். 
 
அப்படி வயிறு நிரம்பி விட்டால் குழந்தை நீண்ட நேரம் நிம்மதியாகத் தூங்குவார்கள். 
 
குழந்தைகள் நிம்மதியாக அழாமல் தூங்க வேண்டுமென்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லது ஒரு டப்பா பால் கொடுத்து குழந்தையை உறங்க வைக்கலாம்.
குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?
குழந்தைகளைக் குளிக்க வைத்துத் தூங்க வைப்பது, உணவு கொடுத்துத் தூங்க வைப்பது மற்றும் பாடல் பாடி தூங்க வைப்பது இந்த முறைகளைத் தான் பின்பற்றி வருகிறார்கள். 
 
மற்றும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மசாஜ் செய்தும், நல்ல மென்மையான இசை கொண்ட ஒலிகளை இசைத்தும் தூங்க வைக்கிறார்கள். 
 
இவற்றில் எது உங்கள் குழந்தை தூங்குவதற்கு உதவி செய்கிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். அதனைப் பின்பற்றி குழந்தைகளைத் தூங்க வையுங்கள்.
தங்கம் விலை உயர்வை கொண்டாடிய நகைக்கடை ஊழியர்கள் !
குழந்தைகள் தூங்குவதற்கு அமைதியான, இரைச்சல் இல்லாத இடத்தை தேர்வு செய்யுங்கள். மேலும் குழந்தைகள் தூங்கும் மெத்தைகள் உறுதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 
 
அத்துடன் குழந்தைகள் தூங்கும் அறை மிகப் பெரிய வசதியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சரியான வெப்பநிலை மற்றும் காற்றோற்றத்துடன் இருக்க வேண்டும். 
 
அதே போல் குழந்தைகள் உறங்கும் போது இரவில் அறை இருட்டாக இருக்கக் கூடாது. ஒரு குறைந்தபட்ச ஒளி வீசும் மின் விளக்காவது இருக்க வேண்டும்.
 
குழந்தைக்கு தூக்கம் வருவதை எப்படி கண்டறிவது?
குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?
மூக்கு, கண்களை கைகளால் குழந்தை தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும். நடவடிக்கைகள் மெதுவாக காணப்படும். 
 
தூக்கம் வருவதன் அறிகுறியாக சில வித்தியாச ஒலிகளையும் எழுப்பலாம். கைகள் அல்லது எதாவது பொருளை சப்பத் தொடங்கும்.
கொத்து, வீச்சு, சில்லி பரோட்டா - சிறுநீரகம், கல்லீரல் கவனம் !
இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டவுடன் தொட்டிலிலோ, மெத்தையிலோ மடியிலோ போட்டு லேசாக தட்டி கொடுத்தால் போதும். குழந்தை தூங்கி விடும். 
சில குழந்தைகளுக்கு உடலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் தூங்காமல் இருக்கலாம் .அதனால் அவற்றை கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிப்பதும் கட்டாயம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)