இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !

Fakrudeen Ali Ahamed
0
அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை குறைக்கலாம் இந்த நிலையில், இடி, மின்னல் தாக்குதலிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். 
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? விழிப்புணர்வு தகவல் !
இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
பெண்கள் பருவமடைவது என்பது !
திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறி‌யாகும். அதனை உணர்ந்த உடன் உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது.

தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக் கொள்ளுவது,‌ மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு, தரையாக படுத்துக் கொள்ளக் கூடாது.
 
ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்க‌‌ம் ஊடுருவும். பெரிய கட்டடங்கள் அல்லது காருக்குள் தஞ்சமடைய வேண்டும்.
குழந்தை பிறந்த பின் உடற்பயிற்சி அவசியம் !
மிகப் பரந்த திறந்த வெளிகள் மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். 
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி?
முடிந்தவரை ‌தரையோடு நேரடி தொடர்பு குறை‌வாக இருக்க‌ம் வகையில், குதிக்கால்கள் தரையில் படாமல் குனிந்து அமர்வதே மிக சிறந்த தற்காப்பு முறையாகும். 
குழந்தை பிறந்த பின் உடற்பயிற்சி அவசியம் !
கால்‌கள் ஒன்றோடு, ஒன்று இடிக்காத வண்ணம் அமர வேண்டும். ஒருவேளை இடி, மின்னலின் போது நீங்க மரங்கள் அடர்ந்த‌, ‌வனம் போன்ற பகுதியில் சிக்கியிருந்தால் உயரம் குறைந்து, அடர்த்தியாக பரவி வளர்ந்திருக்கும் செடிகளை கூடாரமாக பயன்படுத்தலாம்.

பதுங்கிக் கொள்ள இடம் ஏதும் இல்லை யென்றால், கால்களை ஒன்றிணைத்து, குனிந்தபடி முழங்காலைக் கட்டிக் கொண்டு முடிந்த வரை உடலைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மின்னல் தாக்குதலுக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

தனியாக இருக்கும் ஒற்றை மரம் அல்லது உயரமான மரத்துக்குக் கீழே நிற்கக் கூடாது. நீருக்குள் இருந்தால், உடனடியாகக் கரைக்குத் திரும்பி விட வேண்டும்.
நீங்கள் கண்ணாடி அணிபவரா?
ஏனென்றால் நீர் இன்னும் தொலைவில் இருந்து மின்னலைக் கடத்தும் திறன் கொண்டது. வீட்டுக்குள் இருந்தால் தொலைக்காட்சிக்கான இணைப்புகள், குழாய் இணைப்புகள் போன்றவை மூலம் மின்னல் கடத்தப்படக் கூடும்.

குதிரையேற்றம், இருசக்கரவாகன பயணம், மொட்டை மாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற கூடாரங்களில் தங்கக்கூடாது. 
உயரமான மரத்துக்குக் கீழே நிற்கக் கூடாது
ின்சாரத்தால் இயங்கக் கூடியவையான ஹேர் டிரையர், மின்சார பல்துலக்கிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்.
விந்தணு எப்படி பரிசோதனை செய்வது?
மின்னல் ஏற்படும் போது கைபேசி, தொலைபேசியினை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது. உயர் அழுத்த மின் தடங்கள், இரும்பு பாலங்கள், செல்போன் கோபுரங்ளுக்கு அடியில் நிற்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உடலில் நேரடியாக மின்னோட்டம் நுழையும் உலோகங்கள், மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். கடைசி மின்னல் வெளிச்சத்துக்கு பிறகு 30 நிமிடங்கள் காத்திருப்பது சிறந்தது.

ஏனெனில், மின்னல் தாக்குதல் தொடர்பான பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்து முடிந்தவுடனே நிகழ்ந்துள்ளன. 
ஏழு விஷயம் பொய்யின்னா உங்க வாழ்க்கை கஷ்டம் தான் !
போதிய விழிப்புணர்வோடு இருப்பதே மழைக் காலங்களில் இடி,மின்னல் தாக்குதலில் இருந்து காக்கும்.

மின்னல் தாக்கினால் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
மின்னல் தாக்கினால் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
யாருக்காவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அழைக்க வேண்டும். மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை தொடுவதில் எந்த ஆபத்துமில்லை.
காதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகள் !
மின்னலில் எந்த மின்சார சக்தியும் இல்லாததால், அதன் மூலம் யாருக்கும் மின்சாரம் பரவாது. மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் நாடித் துடிப்பினை உடனடியாக சோதிக்க வேண்டும்.

எவ்வாறு முதலுதவி தர வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் பாதிப்படைந்தவருக்கு நீங்கள் முதலுதவி தரலாம். 
 
பொதுவாக பாதிப்படைந்தவர்களின் தலை பகுதியும், கால் பாத பகுதியும் மின்னல் தாக்குதலில் எரிந்து விட வாய்ப்புண்டு.
ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் !
மின்னோட்டம் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் இவை தான் மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புகள் உடைதல், காது கேளாமை மற்றும் பார்வை இழப்பு ஆகியவை ஏற்படலாம். நீங்கள் இதனை கவனிக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)