குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
0
நீங்கள் தூங்கும் போது உங்கள் படுக்கை அறை வெப்பநிலை உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் எளிதில் தூங்கும் திறனையும் பாதிக்கும் என சமீபத்திய ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது.
குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?
இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

குளிர்கால மாதங்களில் நாம் படுக்கைக்குச் செல்லும் பொழுது குளிரை தாங்கும் போர்வையை கொண்டு உடல் முழுவதும் போர்த்தி கொண்டு கதகதப்பாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம். 
சிலர் குளிரை போக்கி கதகதப்பாக இருக்க ஹீட்டர் போன்ற சாதனைகளை பயன்படுத்தி அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் ஆய்வுகள் உங்கள் படுக்கையறை குளிராக இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சொல்கிறது. 

அது மட்டுமல்லாமல் உங்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிப்பது முதல் சிறந்த இரவு தூக்கம் கிடைப்பதற்கு குளிரான படுக்கையறைகளே நல்லது என்கிறது ஆய்வுகள்.

உங்கள் படுக்கையறையானது சுமார் 76 டிகிரி பாரன்ஹீட் இருப்பது நீங்கள் நிம்மதியாக உறங்க சிறந்த வெப்பநிலையாக இருக்கலாம். 
குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?
சமீபத்திய ஒரு ஆய்வில், 76 டிகிரி இருக்கும் குளிர்ந்த அறைகளில் ஒரு மாதத்திற்கு தூங்கிய ஆண்களின் கலோரி எரியும் விகிதம் 42 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்சுலின் அளவும் சரியாக சுரந்துள்ளது. இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயங்களைக் குறைக்கும். ஆய்வில் இந்த ஆண்கள் வெறும் படுக்கை விரிப்புகளுடன் தூங்கினார்கள்.
இப்படி அதிக கலோரி உடலில் எரிய காரணம் குளிரான இடத்தில், நமது உடல் வெப்பநிலையை 98.6 டிகிரிக்கு உயர்த்துவதற்கு கடினமாக உழைக்கிறது. 

இதனால் கலோரி அதிக அளவில் எரிக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது. நீங்கள் ஒரு குளிரான அறையில் எளிதாக தூங்க முடியும். 

அதிக வெப்பமான சூழல் கொண்ட படுக்கையறையில் நீங்கள் தூங்கும் பொழுது ஆழ்நிலை தூக்கம் கிடைக்காமல் அடிக்கடி விழிப்பு நிலையை ஏற்படுத்தும். 
குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?
இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். குளிரான அறையில் நீங்கள் தூங்கும் பொழுது அது அல்சைமர் நோயிலிருந்து உங்கள் மூளையைப் பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

உங்கள் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் வயதாவதை எதிர்த்துப் போராடுவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.

டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இப்படி குளிரான அறையில் தூங்குவது உதவும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. 
ஒரு குளிரான நல்ல அறையில் தூங்குவது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்திற்கும் உகந்ததாக இருக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)